அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு அதிகமாக எரிவாயு உருளைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.750/- ஆகவும் கோவில்பட்டியில் ரூ.748/- ஆகவும், கழுகுமலையில் ரூ. 755.50 ஆகவும், கயத்தாரில் ரூ. 751.50 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ. 748 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ. 765/- எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ. 750/- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.750/- எனவும் 01.03.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நுகர்வோர் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கி.கி.) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
|