கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 16.03.2018. வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள - உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர மற்றும் 32ஆவது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் - வரும் 16.03.2018. வெள்ளிக்கிழமையன்று, 15.15 மணிக்கு – அதாவது, அஸ்ர் தொழுகை நிறைவுற்ற உடன், அல்பிதா பார்க்கில் நடைபெறவுள்ளது.
மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, தவறாமல் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:-
இப்றாஹீம்: 33538691
ஸதக்கத்துல்லாஹ் (கோனா): 66011887
முஹம்மத் முஹ்யித்தீன்: 66821302
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
|