தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தூத்துக்குடி ரோச் பூங்காவில் பாரம்பரிய உணவுத் திருவிழா இம்மாதம் 23 முதல் 25ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஒருங்கிணைந்த ஊட்டசத்து துறையின் சார்பில், பாரம்பரிய உணவு திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி ரோச் பூங்காவில் வரும் 23,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பாரம்பரிய உணவுத் திருவிழா தினசரி மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பிரபல உணவு வகையான மக்ரூன், முதலூர் மஸ்கோத் அல்வா, கீழஈரல் சேவு, கடம்பூர் போளி, கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்ற உணவுவகைகள் உணவுத்திருவிழாவிலே தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும். தூத்துக்குடியில் உள்ள பிரபல நட்சத்திர ஒட்டல்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று பாரமபரிய உணவு வகைகளை தயாhpத்து குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகளிர்திட்டம், ஊட்டச்சத்து, புதுவாழ்வு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.
ரோச் பூங்காவில் பாரம்பரிய உணவுத் திருவிழாவிற்கான 38 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதில் உடல் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. சத்துணவுத் துறை மூலம் பல வகையான கலவை சாதம் தயார் செய்யும் முறைகள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவத்தின் மகத்துவம் அறிந்து கொள்கின்ற வகையில் சித்த மருத்துவம் அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதில் இலவசமாக நிலவேம்பு கசாயம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படவுள்ளது. வேளாண்மைத்துறையின் மூலம் சிறுதானியங்கள், காய்கறிகள் பார்iவைக்கு வைக்கப்படவுள்ளது.
இவ்விழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டா;.மு.வீரப்பன், சார் ஆட்சியர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எஸ்.சரவணன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நோ;முக உதவியாளர் (பொது) திரு.தியாகராஜன், துணைஆட்சியர் (பயிற்சி) செல்வி.லாவண்யா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டா;.ஜெ.சங்கா; விக்னேஷ், மகளிர் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.எஸ்.முத்துலெட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.சந்திரமோகன் (மாநகராட்சி), திரு.ராமகிருஷ்ணன் (நகா;புறம்), திரு.சண்முகசுந்தரம் (ஊரகம்) உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |