காயல்பட்டினத்தில், கடந்த 14.03.2018. அன்று 00.00 மணி துவங்கி – அதிகாலை வரை கனமழை இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பெய்தது. காலை முழுக்க வெயில் ஒளிர்ந்தது.
இவ்வாறிருக்க, அன்று 16.00 மணியளவில் திடீரென வானம் கருமேகங்களால் மறைக்கப்பட்டு, சில மணித்துளிகள் இதமழை பெய்தது.
அதன் பிறகு அவ்வப்போது கருமேகங்கள் திரண்டபோதிலும், இன்றளவும் மழை பெய்யவில்லை. மாறாக, “இனி பழைய படங்களை மட்டும் பார்த்து மகிழ்ந்துகொள்!” என்று கூறியது போன்று - சில நாட்களுக்கு முன் மழை பெய்த அடையாளமே தெரியாத அளவுக்கு நகரில் கடும் வெப்ப வானிலை நிலவுகிறது.
கருமேகப் படங்கள்:
அப்துல் அஜீஸ் (கொச்சியார் தெரு)
|