காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் பெரும்பாலான வீட்டு மாடிகளில் கடும் சோதனை நடத்தப்பட்டது. ஒரு வீட்டில் சோதனையை முடித்த ஆய்வாளர், தரையில் இறங்காமலேயே மறு வீட்டு மாடிக்குத் தாவிச் சென்று சோதனை நடத்தினார்.
பூட்டிய மாடிக் கட்டிடங்களின் சாளரங்கள் வழியே உள்ளே செல்ல முயன்ற அவர், உடல் பருமன் காரணமாக நுழையவியலாமல் பரிதவித்தார்.
புதிய ஆய்வாளரின் திடீர் சோதனையைக் கண்ணுற்ற அப்பகுதி மக்கள், மாடிகளில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆங்காங்கே பறந்து திரிந்த காகங்களும் ஒன்றாக ஒரே இடத்தில் கூடிக் கரைந்து ஓலமிட்டன.
தான் நடத்திய சோதனையின் நிறைவில் எதுவுமே சிக்காததால், ‘வழமை போல’ தரையிறங்காமல் – அடுத்தடுத்த கட்டிடங்கள் வழியே மரங்களுக்குத் தாவிச் சென்று மறைந்துவிட்டார்.
தற்போது அந்த ஆய்வாளரும், அவருக்குத் துணையாக குழந்தையைச் சுமந்த நிலையில் பெண் ஆய்வாளர் ஒருவரும் நகரின் வேறு பகுதிகளில் சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சொளுக்கார் தெருவில் – எம்.எல்.ஹஸன் பஸரீ என்பவரது வீட்டு மாடியில் சோதனையின்போது...:-
|