காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மலர் வெளியீட்டு நிகழ்ச்சி, 04.03.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணியளவில், பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பள்ளி செயலாளர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையேற்றார். ஆலோசகர் எஸ்.எம்.பி.முஹம்மத் அபூபக்கர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவி ஆயிஷா அஃபீஃபா வரவேற்றார்.
எல்.கே.மேனிலைப் பள்ளி & விஸ்டம் பப்ளிக் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ‘புன்னகை மன்றம்’ சமூக ஊடகக் குழும இயக்குநர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர் பீ.ஆனந்தக் கூத்தன் ஆகியோர் வாழ்த்துப் பாடல்கள் பாடினர்.
பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வேதியல் துறை தலைவர் முனைவர் செய்யித் முஹம்மத் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, வெள்ளி விழா மலரை வெளியிட, நகரப் பிரமுகர்களான ‘டோட்டல்’ என்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், எல்.டீ.ஸித்தீக், சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பள்ளி தாளாளர் எம்.ஏ.புகாரீ நன்றி கூற, பிரார்த்ததனையுடன் விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜி.எஸ்.மணிமேகலை ஒருங்கிணைப்பில், பள்ளியின் ஆசிரியர்களும், அலுவலர்களும் செய்திருந்தனர்.
|