காயல்பட்டினம் அருணாச்சலபுரம், மங்களவாடி, எல்.ஆர்.நகர் / அழகாபுரி ஆகிய புறநகர் பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்ட நிலம் தேர்வு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இதற்கான கோரிக்கையை அளித்த “நடப்பது என்ன?” குழுமத்திடம் அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் ஆதி திராவிட சமுதாய மக்கள் உள்ளனர். குறிப்பாக - இச்சமுதாய மக்கள், அருணாச்சலபுரம், மங்களவாடி மற்றும் எல்.ஆர்.நகர் / அழகாபுரி பகுதிகளில் அதிகளவில் உள்ளார்கள். இம்மக்களின் பயன்பாட்டுக்காக, சமுதாய கூட தேவை உள்ளது. இது குறித்து - அப்பகுதி மக்களும், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆதிதிராவிடார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக, சமுதாய கூடங்கள் கட்டும் திட்டம் உள்ளதால், அந்த திட்டம் மூலம் - அருணாச்சலபுரம், மங்களவாடி மற்றும் எல்.ஆர்.நகர்/அழகாபுரி பகுதிகளில் சமுதாய கூடம் தனித்தனியாக அமைத்திட வேண்டி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம் - கடந்த மாதம், நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை மனு வழங்கியிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை தலைமை செயலகத்தில் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்.ராஜலட்சுமி இடமும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு, கடந்த வாரம் வழங்கப்பட்டது.
இம்மனுக்களுக்கு தற்போது பதில் வழங்கியுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் - சமுதாயக்கூடம் கட்ட நிலம் தேர்வு செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 12, 2018; 6:00 pm]
[#NEPR/2018031202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|