காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக வெப்ப வானிலை மிகைத்த நிலையில், இன்று 09.45 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, ஓரளவுக்கு வலுவான காற்றுடன் இதமழை பெய்யத் துவங்கி, 10.15 மணியளவில் முடிவுற்றது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு ‘சாகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு நேற்றைய செய்தி ஊடகங்களில் இடம்பெற்றிருந்தது.
அதை மெய்ப்பிக்கும் வகையில் பெய்துள்ள இம்மழை, நகர வானிலையை மட்டுமின்றி - மக்கள் மனதையும் குளிர்வித்துள்ளது.
படங்கள்:
அப்துல் அஜீஸ் (கொச்சியார் தெரு)
|