சிரியா நாட்டில் அப்பாவி பொதுமக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 02.03.2018. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நகர துணைத் தலைவர் அஷ்ரஃப் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மைதீன் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், பாலப்பா அப்துல் காதிர். எஸ்.டி.பீ.ஐ. தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இவ்வார்ப்பாட்டத்தின், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள்:
அப்துல் அஜீஸ் (கொச்சியார் தெரு)
|