காயல்பட்டினத்தில் புறக்காவல் மையம் நிறுவப்பட்டுள்ளமை தொடர்பாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம் பேருந்து நிலையம் வாயிலில் நேற்றிரவு (9-3-2018) காவல்துறை பூத் அமைக்கப்பட்டுள்ளது குறித்து சில கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக - இந்த பூத் அமைத்திட நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை வைத்தததாகவும், அதற்கான அனுசரணையும் நடப்பது என்ன? குழுமம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
காவல்துறை பூத் அமைப்பதாலும், காவல்நிலையம் அமைப்பதாலும் மட்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனை சீராகிவிடும் என்பது உண்மை அல்ல எனவே - பிரச்சனைகளை தீர்க்க உதவாத, பிரயோஜனம் இல்லாத எந்த கோரிக்கையையும் நடப்பது என்ன? குழுமம் இதுவரை எந்த அரசு துறையிடமும் வைத்ததும் இல்லை; வருங்காலங்களில் வைக்கவும் செய்யாது.
மாறாக - நகரில் தற்போது நிலவும் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கான திடமான தீர்வு - நேர்மையான, திறமையான காவல்துறை செயல்பாடுகள் மூலம் தான் கிடைக்குமே ஒழிய, பூத் அமைப்பது மூலம் மட்டுமே கிடைக்காது என்பதே நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 10, 2018; 10:00 am]
[#NEPR/2018031001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|