காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ப்ளஸ் 1 அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுத் தேர்ச்சியடைய, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பிரார்த்தனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நாளை (மார்ச் 7) - பதினொன்றாம் வகுப்பு அரசு பொது தேர்வு - தமிழகமெங்கும் துவங்குகிறது. இத்தேர்வுகள் ஏப்ரல் 16 வரை நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 192 பள்ளிகளை சார்ந்த 9,832 மாணவர்களும், 11,916 மாணவியர்களும் என மொத்தம் 21,748 பேர், 74 தேர்வு மையங்களில் இத்தேர்வுகளை எழுத்தவுள்ளனர்.
காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து 500 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுதவுள்ளனர்.
இத்தேர்வுகளை சந்திக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் - எவ்வித பதற்றமும் இல்லாமல், அமைதியாகவும், நிதானமாகவும் தேர்வுகளை எழுதி சிறப்புற தேர்ச்சிபெற - நடப்பது என்ன? குழும அங்கத்தினர் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.
அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள கால அட்டவணை
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 6, 2018; 8:00 pm]
[#NEPR/2018030601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|