காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப் பள்ளியின் 85ஆம் ஆண்டு விழா & ஸ்மார்ட் வகுப்பறை துவக்க விழா, 03.03.2018. சனிக்கிழமையன்று 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ தலைமையேற்றார். பள்ளி மாணவர்களின் கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து, பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை வாவு எம்.எம்.உவைஸ் திறந்து வைத்தார்.
தலைமையாசிரியை எஸ்.ஜுனைதா ராணி வரவேற்றார். நகரப் பிரமுகர்களான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக்கு தம்பி, பள்ளி செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, சென்ட்ரல் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் எம்.கே.ஷெரீஃப், வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.அப்துல் ஹக், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக், வி.ஐ.ஜெய்னுல் ஆப்தீன், எம்.இ.செய்யித் முஹ்யித்தீன், எம்.யு.மொகுதூம் முஹம்மத் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்து, சாதனை மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினர்.
சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் செய்யித் அப்துல் காதிர் வாழ்த்துரையாற்றினார். மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து. ஆசிரியர் ஏ.ஏ.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது. இதில், பள்ளியின் நிர்வாகிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|