காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த தம்பா எம்.கே.முத்து ஆமினா உம்மாள், நேற்று (10.03.2018. சனிக்கிழமை) 16.30 மணியளவில் சென்னை பெரம்பூரில் காலமானார். அவருக்கு வயது 82. அன்னார்,
மர்ஹூம் முஹம்மத் ஸுலைமான் லெப்பை அவர்களின் மகளும்,
மர்ஹூம் ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் அக்பர் காஸிம், எம்.ஏ.ஷேக் அப்துல் காதிர், எம்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் (குட்டி மாமா) ஆகியோரின் தாயாரும்,
ஏ.முஹம்மத் அப்துல் காதிர், எஸ்.எம்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் மாமியாரும்,
மர்ஹூம் முஹ்யித்தீன் தம்பி, மர்ஹூம் முஹம்மத் அபூபக்கர், மர்ஹூம் முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் எஸ்.ஏ.அஹ்மத், மர்ஹூம் எஸ்.ஏ.யூஸுஃப் ஸாஹிப், மர்ஹூம் எஸ்.ஏ.புகாரீ ஆகியோரது சகோதரரின் மனைவியும்,
எஸ்.ஏ.கே.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எம்.ஏ.கே.முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகியோரது தந்தையரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
S.M.முஹ்யித்தீன் அப்துல் காதிர் |