ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்திற்குப் புதிய தலைவரும், சில நிர்வாகப் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அவ்வமைப்பின் மக்கள் தொடர்பு & செய்தி – ஊடகத் துறை பொறுப்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் புதிய தலைவராக M.M.மக்பூல் அஹ்மது பொறுப்பேற்பு!
அபூதபீ காயல் நல மன்றத்தின் 55 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 09-03-2018 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீத் அவர்களது இல்லத்தில் மன்றத்தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அவர்களின் தலைமையில் செயற்குழு உறுப்பினர் ஸாலிஹ் அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
தனது புதிய பணி இடம் மாறுதல் காரணமாக மன்றத்தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அவர்கள் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதால், சகோதரர்M.M.மக்பூல் அஹ்மது அவர்கள் புதிய தலைவராகவும் ,DR. ஹமீத்யாசிர் பொதுச்செயலாளராகவும், ஷம்சுதீன் அவர்கள் துணைச் செயலாளராகவும் நிர்வாக குழுவின் முழு ஒப்புதலோடு ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
விடைபெறும் தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அவர்களின் சேவைகளை பாராட்டி கலந்து கொண்ட செயற்குழு மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
மன்றத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சகோதரர் M.M.மக்பூல் அஹ்மது அவர்கள் விடைபெறும் தலைவருக்கு மன்றத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார்கள்.
மன்றத்தின் மூத்த உறுப்பினரும்,வினாடிவினா(QUIZ)) மாஸ்டர்L.T.இப்ராஹிம் அவர்கள் புதிய தலைவராய் பொறுப்பேற்றுள்ள சகோதரர்M.M.மக்பூல் அஹ்மது அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
புதிய தலைவராக பொறுப்பேற்று உரையாற்றிய தலைவர் M.M.மக்பூல் அஹ்மது நிர்வாகிகள் ,அனைத்து உறுப்பினர்களும் எப்போதும் போல் உயரிய கருத்துக்களையும் ,ஒத்துழைப்புக்களையும் தவறாது தந்து தம்மை ஊக்கப்படுத்தி வழிநடத்திட அன்போடு கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் தேவையுடையோர்களுக்கு நோன்பு சாமான்கள் வழங்கும் திட்டத்திற்கான அனுசரணை மற்றும் பயனாளிகள் பெயரினை ரமலான் நெருங்கி விட்டதை மனதில் கொண்டு எதிர் வரும் 10-04-2018 தேதிக்குள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட புதிய தலைவர்M.M.மக்பூல் அஹ்மது,சகோதரர்கள்.பாதுல் அஸ்ஹப் (அப்துல்காதர் ),ஷம்சுதீன் ,அபூஹுரைரா ஆகியோரிடம் அளித்திடும்மாறு தலைவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக பாதுல் அஸ்ஹப் (அப்துல்காதர் துஆ இறைஞ்ச,கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |