கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 158 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, முகாம் ஒருங்கிணைப்பாளர்களான எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் (ஹாங்காங்), எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் (கத்தர்) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசோதனை இலவச முகாமை 10.02.2018., 11.02.2018. ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின.
இம்முகாம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, 10.02.2018. சனிக்கிழமையன்று, காயல்பட்டினம்
காட்டு தைக்கா தெரு செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா,
தைக்கா தெரு மன்ஸகுன் நிஸ்வான் பெண்கள் தைக்கா,
ஆறாம்பள்ளித் தெரு வாவு பெண்கள் தைக்கா,
சதுக்கைத் தெரு சதக்கத்துல்லாஹ் அப்பா பெண்கள் தைக்கா
ஆகிய 4 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்தின் மருத்துவக் குழுவினர் இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.
11.02.2018. ஞாயிற்றுக்கிழமையன்று, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், நமதூர் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.
முகாம் துவக்க நிகழ்ச்சி, கே.எம்.டீ. மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது. கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, ஹாங்காங் பேரவை முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் அறிமுகவுரையாற்றினார்.
புற்றுநோய் பரவும் விதம், அதைத் தடுக்கும் முறை, வந்துவிட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்களான டாக்டர் விஜய், டாக்டர் யாமினி ஆகியோர் உரையாற்றினர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் கத்தர் முஹம்மத் முஹ்யித்தீன் (மம்மி) நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர் பரிசோதனை முகாம் துவங்கியது.
டாக்டர் விஜய், டாக்டர் யாமினி, டாக்டர் ராபியா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.
காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 60 ஆண்களும், 98 பெண்களும் என மொத்தம் 158 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனையில் எந்தப் பிரச்சினையும் தென்படவில்லை என்றும், வெகு சிலருக்கு மட்டும் புற்றுநோய்க்கான ஆரம்ப அடையாளங்கள் தென்பட்டதாகவும், எளிய சிகிச்சையில் இலகுவாக அதைச் சரிசெய்துவிடலாம் என்றும் மருத்துவக் குழுவினர் நிறைவு நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.
முகாமில் சேவையாற்றிய செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் - முகாமை இணைந்து நடத்திய கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாட்டுப் பணிகளை ஆண்டுதோறும் சிறப்புற வடிவமைத்துச் செய்து தந்துகொண்டிருக்கும் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களைக் கண்ணியப்படுத்தும் வகையில் அவருக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவரும் – நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, ஹாஃபிழ் ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன், மூத்த உறுப்பினர் உமர் அனஸ், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் பொறுப்பாளர் யூஸுஃப் கனீ, மலபார் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் மஸ்ஊத், சமூக ஆர்வலர்களான பீ.எஸ்.எம்.இல்யாஸ், எஸ்.ஏ.தவ்ஹீத், ஹாஃபிழ் எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஹருத்தீன் (சீனா) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தனர். ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், மன்னர் பாதுல் அஸ்ஹப், கே.எம்.டீ.சுலைமான், முஹம்மத் ட்ராவல்ஸ் அஹ்மத் சுலைமான் & ஜஃபருல்லாஹ் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ் & A.R.ஷேக் முஹம்மத்
(பிரதிநிதிகள்: கத்தர் & ஹாங்காங் கா.ந.மன்றங்கள்.)
|