இணையவழி பத்திரப்பதிவுகளின்போது ‘காயல்பட்டினம்’ பெயர் இல்லை என்பதை – “நடப்பது என்ன?” குழுமம் சுட்டிக்காட்டியதையடுத்து, அக்குறை விரைவில் சரி செய்யப்படும் என பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் (SUB-REGISTRAR OFFICE) பத்திரப்பதிவுகள் கடந்த சில மாதங்களாக இணையவழி மூலம் செய்யப்பட்டுவருகிறது. சோதனை அடிப்படையில் (PILOT PROJECT) தற்போது அமலில் உள்ள இணையவழி பதிவுகளில் சில பிரச்சனைகள் உள்ளன.
குறிப்பாக - ஊர் பெயர் தேர்வு செய்யும்போது - உள்ளாட்சி மன்றம் என ஆறுமுகநேரி மட்டும் காண்பிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பல முறை புகார்கள் தெரிவிக்கப்பட்டும், பிழை நிவர்த்தி செய்யப்படவில்லை என தெரிகிறது.
இது சம்பந்தமாக - பிப்ரவரி 8 அன்று, சென்னையில் உள்ள பத்திரப்பதிவு துறை மூத்த அதிகாரிகளை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து புகார் மனு வழங்கினர். சோதனையோட்டம் என்பதால் பல குறைப்பாடுகள் உள்ளதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், அடுத்த சில தினங்களில் இப்பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தனர்.
இது சம்பந்தமான மனு - வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலர் திரு C. சந்திரமவுலி IAS அவர்களிடமும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - சென்னையில் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 10, 2018; 7:30 am]
[#NEPR/2018021001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|