காயல்பட்டினம் நகராட்சியின், வார்டு மறுசீரமைப்பில் பொதுமக்களின் உணர்வுகளை மதித்து செயல்படுமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பொதுமக்களின் உணர்வுகள் சிறிதும் மதிக்கப்படாமல், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக வார்டுகளை மறுசீரமைப்பு செய்துள்ளதாகவும், இதனால் நகர பொதுமக்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பதாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ள அவர், குறைகள் களையப்பட்டு – சரியான முறையில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காயல்பட்டினம் நகரில் சிமெண்ட், பேவர் ப்ளாக் ஆகிய சாலைகள் எக்காலத்திலும் அறவே வேண்டாம் என்றும், தரமான தார் சாலைகளை மட்டுமே அமைத்திடுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
|