மனிதநேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, அதன் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், “கோட்டை முதல் குமரி வரை” எனும் தலைப்பில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
13.02.2018. அன்று காயல்பட்டினம் வருகை தந்த அவர், திருச்செந்தூர் சாலையிலுள்ள கருணாலயா ஆதரவற்றோர் இல்லைத்திலுள்ளோரக்கும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலுள்ள உள் நோயாளிகளுக்கும், உணவுப் பொதியை வழங்கினார். காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்று நடும் பணியையும் அவர் துவக்கி வைத்தார்.
மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட, காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் இதன்போது உடனிருந்தனர்.
|