தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளுமாறு – சஊதி அரபிய்யாவிலுள்ள ஜித்தா நகருக்குச் சென்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகி ஹாமித் ரிஃபாய் உள்ளிட்ட குழுவினர் நேரில் கோரிக்கை அளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு திருச்சி சிவா MP - கடந்த வாரம், சவூதி அரேபியா சென்றிருந்தார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாக - ஜித்தாவில் உள்ள பன்னாட்டு தி.மு.க. நலன்புரியும் கூட்டமைப்பு, 03.02.2018. சனிக்கிழமையன்று, ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த சந்திப்பின் போது - நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் (MPLADS) இருந்து கீழ்க்காணும் பணிகளை, காயல்பட்டினம் நகரில் மேற்கொள்ள கோரிக்கை - திரு திருச்சி சிவா MP இடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக, அதன் நிர்வாகிகளில் ஒருவரான ஹாஜி MW ஹாமீது ரிஃபாய் அவர்களால் - கூட்டத்தில் கலந்துக்கொண்ட காயலர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
(1) காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு Dialysis, Ultra Sound Scan போன்ற நவீன கருவிகள்
(2) காயல்பட்டினம் IOB சந்திப்பு இடத்தில், பயணியர் நிழல் குடை
(3) காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு தேவையான FURNITURES மற்றும் அதிக அளவிலான புத்தகங்கள்
திரு திருச்சி சிவா MP - காயல்பட்டினத்தை சார்ந்த பலருக்கு நெருக்கமானவர்; கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு, தனது தொகுதி நிதியில் இருந்து கட்டிடம் கட்டிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 6, 2018; 12:00 pm]
[#NEPR/2018020601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|