காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு மறுவரையறை தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முன்னோடி கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர மக்களின் சார்பில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சேபனைகள் நேரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் இறுதியில், மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் வரைவு (DRAFT) வார்டு விபரங்கள் வெளியிடப்பட்டு, ஜனவரி 12 வரை - ஆட்சேபனைகளும், கருத்துக்களும் பெறப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக - தூத்துக்குடி மாவட்டத்தில் பெறப்பட்ட சுமார் 500 ஆட்சேபனைகள் / கருத்துக்கள் அடிப்படையில் - முன்னோடி ஆலோசனை கூட்டம், ஜனவரி 30 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS முன்னிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் - வார்டுகள் மறுவரைமுறை சம்பந்தமாக தங்கள் ஆட்சேபனைகளை, கருத்துக்களை சமர்ப்பித்தவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
நடப்பது என்ன? குழுமம் சார்பாக - விரிவான ஆட்சேபனை மனுக்களும், பரிந்துரையும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிவர். 30.01.2018. அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், வார்டுகளை மறுவரைமுறை செய்ததில் உள்ள குறைபாடுகளை விரிவாக எடுத்துரைத்து, மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர்.
பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளும் தற்போது ஆய்வில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் - இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 30, 2018; 8:15 pm]
[#NEPR/2018013003]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|