காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும தொடர் முயற்சியின் பயனாக, அரசு மருத்துவமனையில் நான்காவது மருத்துவர் பணியிடம் காலிப் பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நான்கு மருத்துவர்கள் வரை நியமனம் செய்ய அரசு அனுமதியுள்ளது (SANCTIONED POSTS).
சில காலங்களாக - டாக்டர் ராணி டப்ஸ் மற்றும் டாக்டர் ஜெஃப்ரீ ஆகியோர் மட்டும் இம்மருத்துவமனையின் நிரந்தர மருத்துவர்களாக செயல்புரிந்து வந்தனர். டாக்டர் சரஸ்வதி - நீண்ட விடுமுறையில் சென்றிருந்தார். டாக்டர் ஹேமலதா என்பவர் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிபவராக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், National Health Mission (NHM) திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் - டாக்டர் ஜெஃப்ரீ வேறொரு அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகவே - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நான்கு மருத்துவர்களும் பணியில் இருக்கவேண்டும் எனக்கோரி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக தொடர்ந்து - சென்னையிலும், தூத்துக்குடியிலும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து, ஜூன் 2017 இறுதியில் - டாக்டர் ஜெஃப்ரீ இடத்தில டாக்டர் செல்வின், நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் - நீண்ட நாட்கள் விடுமுறையில் இருந்த டாக்டர் சரஸ்வதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவரது இடத்தில் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் (PHC) பணிப்புரிந்து வந்த காயல்பட்டினம் பூர்வீக மருத்துவர் டாக்டர் ஹில்மி - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், செப்டம்பர் 2017 இல் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதன் மூலம் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது.
இருப்பினும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஹேமலதா பணிப்புரிவதாக தொடர்ந்து காண்பிக்கப்பட்டுவந்ததால், நான்காவது இடம் நிரப்பப்படாமல் இருந்தது.
இந்நிலையில் - டாக்டர் ஹேமலதாவின் இடம் காலியாகவுள்ளது என அறிவிக்கப்படவேண்டும் என நடப்பது என்ன? குழுமம் - சுகாதாரைத்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளிடமும் - பல மாதங்களாக - தொடர்ந்து வலியுறுத்தி வந்ததது.
அதன் பயனாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிப்புரிந்து வருவதாக காண்பிக்கப்பட்டுவந்த டாக்டர் ஹேமலதா - தற்போது வேறொரு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இதன் மூலம் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் நான்காவது மருத்துவர் இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் (DMS) இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் - நடப்பது என்ன? குழுமத்திடம் சென்னையில் தெரிவித்தார். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
இதனை தொடர்ந்து - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் நான்காவது மருத்துவர் காலியிடம், MEDICAL RECRUITMENT BOARD (MRB) மூலமாக விரைவில் நிரப்பப்படும் என்றும் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் மேலும் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 26, 2018; 5:00 pm]
[#NEPR/2018012605]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|