காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும புகார் மனுவின் எதிரொலியாக, ஆதார் பதிவு மையத்தில் முறைகேடாக நடந்து வந்த டோக்கன் முறை அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆதார் பதிவு மையம் உள்ளது. இந்த மையம் மூலம் - புதிய ஆதார் பதிவு செய்யலாம்; மேலும் - திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
காயல்பட்டினம் நகராட்சி மூலம், தமிழக அரசு நடத்தும் இந்த மையம் இயங்குவதில் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாக - நடப்பது என்ன? குழுமத்திடம் பொது மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு நடப்பது என்ன? குழுமம் தெரிவித்தபோது - அலட்சியமான பதிலே நகராட்சியிடம் இருந்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து - கடந்த ஜனவரி 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமான மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கீழ்க்காணும் குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன:
// முறையான நேரங்களில் ஆதார் பதிவு மையம் இயங்குவதில்லை
// மையத்தில் தேவையான படிவங்கள் வைக்கப்படாமல், தனியார் கடைகளில் இருந்து அவற்றை பொது மக்கள் விலைகொடுத்து வாங்கி வர நிர்பந்திக்க படுகிறார்கள்
// மையத்திற்கு தொடர்பில்லாத நபர் - டோக்கன் வழங்குவதில் தலையிடுவதால் முறைக்கேடுகள் நடக்கிறது
// பொது மக்களிடம் பணிபுரிபவர்கள் கனிவாக நடப்பதில்லை
இந்த புகாரை தொடர்ந்து - தற்போது டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு, வரிசை முறையில் பொது மக்கள் ஆதார் பதிவு செய்யலாம் என நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
மேலும் - காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் இணைப்பு தடை ஏற்படும் நாள் தவிர, இதர நாட்கள் அனைத்தும் இந்த மையம் இயங்கி வருகிறது என்று நகராட்சி தரப்பில், நடப்பது என்ன? குழுமத்தின் மனுவிற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் வழங்கப்படும் சேவைகளுக்கான படிவங்கள் - இலவசமாக வழங்கப்படவேண்டும். இந்த மையத்தில் தேவையான படிவங்கள் வைக்கப்படவில்லை என்றாலோ, தனியாரிடம் விலைக்கொடுத்து வாங்கிட நிர்பந்தம் செய்தாலோ - பொது மக்கள், நகராட்சி ஆணையரிடம் (அலைபேசி எண் +91 94438 58174) புகார் தெரிவிக்கவும்.
நகராட்சியிடம் புகார் தெரிவித்தபின்பும், குறைப்பாடு தொடருகிறது எனில் - நடப்பது என்ன? குழுமத்திற்கு தகவல் வழங்கும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 26, 2018; 12:30 pm]
[#NEPR/2018012603]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|