காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள இரு கடைகள் உட்பட, 4 இனங்களுக்கு நகராட்சியின் சார்பில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் கீழ்க்காணும் நான்கு இனங்களுக்கு - ஜனவரி 30 செவ்வாயன்று காலை 11 மணிக்கு ஏலம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது:-
இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விரும்புவோர், ஜனவரி 29 மாலை 4 மணிக்கு முன்னர், கீழே விவரிக்கப்பட்டுள்ள பொறுப்பைத்தொகையை வரைவு காசோலையாகவோ, ரொக்கமாகவோ - காயல்பட்டினம் நகராட்சியில் செலுத்தவேண்டும் என அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
(1) நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலைய பேருந்து நுழைவுக்கட்டணம் வசூல் உரிமம்
பொறுப்புத்தொகை - ரூபாய் 10,000
குத்தகை காலம் - 2017 - 2018 ஒப்படைக்கும் நாள் முதல் ஓராண்டு
(2) நகராட்சிக்கு பாத்தியப்பட்ட மரங்களின் மேலாதயம்
அ) நகராட்சி அலுவலக தென்னை மரங்கள்
ஆ) பேருந்து நிலைய தென்னை மரங்கள்
பொறுப்புத்தொகை - ரூபாய் 1000
குத்தகை காலம் - 2017 - 2018 ஒப்படைக்கும் நாள் முதல் ஓராண்டு
(3) நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலைய உள்கடை எண் 5
பொறுப்புத்தொகை - ரூபாய் 25,000
குத்தகை காலம் - 2017 - 2018 ஒப்படைக்கும் நாள் முதல் ஓராண்டு
(4) நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலைய உள்கடை எண் 6
பொறுப்புத்தொகை - ரூபாய் 25,000
குத்தகை காலம் - 2017 - 2018 ஒப்படைக்கும் நாள் முதல் ஓராண்டு
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 26, 2018; 10:30 am]
[#NEPR/2018012601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|