| |
செய்தி எண் (ID #) 20173 | | | திங்கள், பிப்ரவரி 12, 2018 | ஜன. 31 அன்று முழு சந்திர கிரகணம்! காயல்பட்டினத்தில் தெளிவாகத் தென்பட்டது!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1112 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
31.01.2018. அன்று காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் முழு சந்திர கிரகணம் தென்பட்டது. இக்கிரகணம் குறித்த தகவல்களை உள்ளடக்கி, கிரகணத்திற்கு முந்தைய நாளன்று “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் வெளியிட்ட செய்தியறிக்கை:-
நாளை (ஜனவரி 31) - முழு சந்திர கிரகணம் (TOTAL LUNAR ECLIPSE) - ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை காயல்பட்டினத்தில் பார்க்கலாம்.
கண்ணுக்கு எளிதாக புலப்படாத நிழலினால் ஏற்படும் கிரகணம் துவங்கும் நேரம் (Penumbral Eclipse begins)
4:21 PM (காயல்பட்டினத்தில் சந்திரன் உதயமாகியிருக்காது; எனவே காண முடியாது)
பகுதி கிரகணம் துவங்கும் நேரம் (Partial Eclipse begins)
5:18 PM (காயல்பட்டினத்தில் சந்திரன் உதயமாகியிருக்காது; எனவே காண முடியாது)
முழு கிரகணம் துவங்கும் நேரம் (Full Eclipse begins)
6:21 PM (காயல்பட்டினத்தில் சந்திரன் உதயமாகி 2 நிமிடங்கள் கழித்து முழு சந்திரகிரகணம் துவங்குகிறது; காயல்பட்டினத்தில் - கிழக்கு திசையில் காணலாம்)
கிரகணம் உச்சக்கட்டம் (Maximum Eclipse)
6:59 PM
முழு கிரகணம் முடியும் நேரம் (Full Eclipse ends)
7:37 PM
பகுதி கிரகணம் முடியும் நேரம் (Partial Eclipse ends)
8:41 PM
கண்ணுக்கு எளிதாக புலப்படாத நிழலினால் ஏற்படும் கிரகணம் முடியும் நேரம் (Penumbral Eclipse ends)
9:38 PM
சந்திர கிரகணங்கள் (LUNAR ECLIPSES) - பௌர்ணமி (FULL MOON) அன்றே நிகழும்.
ஒரு மாதத்தில் பொதுவாக ஒரு பௌர்ணமியே நிகழும். இந்த மாதம் இரண்டு பௌர்ணமிகள் நிகழ்கின்றன. இரண்டாவது நிகழும் பௌர்ணமியின் போது தென்படும் சந்திரன் BLUE MOON என அழைக்கப்படுகிறது.
மேலும் - பூமியை சுற்றும் சந்திரன், சில நேரங்களில் அதிக தூரம் விலகியும் (APOGEE), சில நேரங்களில் அருகாமையிலும் இருக்கும் (PERIGEE). நாளை நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது - சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் என்பதால் இது SUPER BLUE MOON என்றும் அழைக்கப்படுகிறது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் - நேர்கோட்டில் பூமி வரும்போது, சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.
சந்திரன் - நீல வர்ணத்தில் நாளை இருக்கும் என்பதால் - அது BLUE MOON என அழைக்கப்படுவதாக வெளிவரும் ஊடக செய்திகள் தவறானவை.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 30, 2018; 10:00 pm]
[#NEPR/2018013004]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|