அரசுத் துறைகளில் பொதுமக்கள் விண்ணப்பங்களுடன் இணைத்துச் சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கு சுய சான்றொப்பம் (Self Attestation) போதுமானது; Gazetted அதிகாரியின் சான்றொப்பம் தேவையில்லை என – அரசு ஆணையை மேற்கோள் காட்டி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் விழிப்புணர்வுத் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அரசு துறைகளிடம் - சில சேவைகளுக்கான விண்ணப்பங்களை பொது மக்கள் சமர்ப்பிக்கும்போது, சில சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவேண்டியிருக்கும்.
உதாரணமாக - திருமணப்பதிவின்போது, அடையாள அட்டை நகல்.
அந்த நகல்களில் - அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் (GAZETTED OFFICER ATTESTATION) இருக்கவேண்டும் என்ற நடைமுறை, 2014 ஆம் ஆண்டு வரை இருந்தது.
இந்த நடைமுறையால் - பொது மக்கள் பெருத்த சிரமத்திற்கு உள்ளாவதாலும், அதிகாரியை சந்திக்கும்போது அசல் (ORIGINAL) காண்பிக்கப்படவேண்டும் என்பதால் சான்றொப்பம் (ATTESTATION) பெறுவதால் பெரிய பயன் இல்லை என்பதாலும் - செப்டம்பர் 23, 2014 அன்று வெளியான பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறையின் அரசாணை எண் 96, நகல்களில் சுய சான்றொப்பம் (SELF ATTESTATION) போதுமானது என்றும், அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர் (GAZETTED OFFICER) மூலமான சான்றொப்பம் தேவையில்லை என்றும், அதிகாரிகளை சந்திக்கும்போது - அசல் (ORIGINAL) ஆவணத்தை காண்பிப்பது போதுமானது என்றும் தெரிவிக்கிறது.
பொது மக்களின் பயனுக்காக - 2014 ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட ஆணை வருமாறு:-
எனவே - அரசு அனுமதித்துள்ள இந்த வழிமுறையை பொதுமக்கள் பின்பற்றி, தங்கள் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கவும், இந்த அரசாணையை புறக்கணித்து - அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்களின் (GAZETTED OFFICER) சான்றொப்பம் கோரும் அரசு துறைகள் குறித்து தகவல் வழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 28, 2018; 11:00 pm]
[#NEPR/2018012801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|