ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 31.05.2018. வியாழக்கிழமையன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ், எதிர் வரும் மே 31- ஆம் தேதி வியாழக்கிழமையன்று, நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 12-வது பொதுக்குழு இஃப்தார்- நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
அபூதபீ, அல்அய்ன், அமீரக மேற்கு மாகாணம் வாழ் காயல் உறுப்பினர்கள் அனைவர்களும் இச்செய்தியினை அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்ப சகிதம் நிகழ்விடத்திற்கு அவசியம் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: மாலை 5 : 30 மணி முதல் 8:30 மணி வரை.
இடம்: Caravan Restaurant – Electra Street(Near NMC-Hospital)
Location : Hamed Centre building, backside -Next to Sangeetha Restaurant, opp to Madinat zayed car parking
குறிப்பு: இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருகை ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்திடத்தோதுவாக தங்களின் வருகையை உறுதி செய்ய நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் PMSR செய்யது இப்ராஹிம் (0564554206) ,PMSR ஷேக்னா (0505382512), M.H.L.ஷேக் (0561805725) மற்றும் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் (0509450404) தொடர்பு கொள்ளும் ஒருவரிடம் முற்கூட்டியே வருகையை பதிவு செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
அழைப்பில் அன்புடன்,
தலைவர், நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,
அபூதபீ காயல் நல மன்றம் - ஐக்கிய அரபு அமீரகம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|