ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகளுக்கும் சேர்த்தே கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தனிக்கட்டணம் கிடையாது என்றும் – கல்விக் கட்டணக் குழு சிறப்பு அதிகாரி காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
இருப்பினும், காயல்பட்டினம் நகர தனியார் பள்ளிக்கூடங்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட அதிகமாக பல ஆண்டுகளாக வாங்குகின்றன.
இது சம்பந்தமாக நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவின் (Tamil Nadu Private Schools Fee Determination Committee) சிறப்பு அதிகாரியிடம் (SPECIAL OFFICER) வினவினர்.
அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:
// ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு ஸ்மார்ட் கிளாஸ் போன்ற அம்சங்களை உள்ளடிக்கியே கல்விக்கட்டணம் (TUITION FEE) நிர்ணயம் செய்யபப்ட்டுள்ளது; ஸ்மார்ட் கிளாஸ் க்கு என தனியாக கட்டணம் வாங்க கூடாது
// புத்தகங்கள், இதர ஸ்டேஷனேரி பொருட்களை பள்ளிக்கூடங்களில் தான் வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது.
// அவ்வாறு புத்தகங்கள், ஸ்டேஷனேரி பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினால், MRP விலையை விட அதிகமாக கொடுக்கக்கூடாது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் - அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் கேட்டால், எழுத்துப்பூர்வமாக கீழ்க்காணும் முகவரிக்கு - ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்குமாறும் அவர் கூறினார்.
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus,
College Road,
Chennai - 600 006.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 22, 2018; 3:00 pm]
[#NEPR/2018052203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|