தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், காயல்பட்டினத்தில் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
தற்போது - தூத்துக்குடி மாவட்டத்தின் 148 தனியார் பள்ளிக்கூடங்களின் மூன்று ஆண்டுகளுக்கான (2017-2018, 2018-2019, 2019-2020) கல்விக்கட்டணம் விபரம், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) மூலம் வெளியாகியுள்ளன.
இருப்பினும் - நகரின், கீழ்க்காணும் ஆறு பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம், இக்குழுவினால் வெளியிடப்படவில்லை.
இந்த பள்ளிக்கூடங்கள், இணையவழியாக தேவையான தகவல்களை சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சமர்ப்பிக்கும் தகவல்களை ஆய்வு செய்தபின்னர் - இப்பள்ளிக்கூடங்களுக்கான கல்விக்கட்டணங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
(1) Rahmaniya Nursery & Primary School
(2) Sri Sathiya Sai Nursery & Primary School
(3) Al Ameen Nursery & Primary School
(4) Kamalavathi Hr. Sec. School
(5) Zubaida Hr. Sec. School
(6) Muhaiydeen Matriculation Hr.sec School
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 22, 2018; 11:30 pm]
[#NEPR/2018052207]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|