சென்னையில் வசிக்கும் – காயல்பட்டினம் நெசவு ஜமாஅத்தினரால், 7ஆவது ஆண்டாக இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
சென்னையில் வசிக்கும் – காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி (நெசவு) ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்களால், 27.05.2018. ஞாயிற்றுக்கிழமை – ரமழான் 11ஆம் நாளன்று, சென்னை எழும்பூரிலுள்ள சிராஜ் மஹாலில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 150க்கும் அதிகமான நெசவு ஜமாஅத்தினர் பங்கேற்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானங்கள், பழ வகைகள், வடை வகைகள், கறி கஞ்சி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியை, ஹாஃபிழ் முஹம்மத் ரிழ்வான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
இந்த இஃப்தார் நிகழ்ச்சியின் நோக்கம், கல்வி – வேலைவாய்ப்பில் நெசவு ஜமாஅத்தினரின் இன்றைய நிலை, பொருளாதாரத்தில் ஜமாஅத்தினர் சந்திக்கும் சவால்கள் குறித்து கிதுரு முஹ்யித்தீன் உரையாற்றினார்.
நெசவு ஜமாஅத்தின் இதுநாள் வரையிலான வளர்ச்சிப் பணிகள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட உழைப்புகள் குறித்தும், வருங்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், எஸ்.இப்னு ஸஊத் விளக்கிப் பேசினார்.
நிறைவில் அனைவருக்கும் சுவையான பிரியாணி பொதியிட்டு வழங்கப்பட்டது. கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
தகவல் & படங்கள்:
கிதுரு முஹ்யித்தீன் |