தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விட அதிகளவில் பெற்றோரிடமிருந்து பள்ளிக்கூடங்கள் கட்டணம் பெற்றிருந்தால், அதுகுறித்து தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டிய புகார் கடிதத்தின் மாதிரியை காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
இருப்பினும் - காயல்பட்டினம் சார்ந்த தனியார் பள்ளிக்கூடங்கள் - அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக வசூல் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையைவிட அதிகமாக வசூல் செய்யவேண்டாம் எனக்கோரி நகர தனியார் பள்ளிக்கூடங்களுக்கு - கடந்த மாத துவக்கத்தில், எழுத்துப்பூர்வமாக நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை வைத்திருந்தது நினைவிருக்கலாம்.
இன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டணம் நிர்ணயக் குழு, தமிழக அரசின் பள்ளிக்கூட கல்வித்துறையின் முதன்மை செயலர், பள்ளிக்கூடங்களின் இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களின் இயக்குனர் ஆகியோருக்கு - சான்றுகளுடன், புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் - அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக பெறப்பட்ட தொகையை பெற்றோருக்கு திருப்பி வழங்கிட உத்தரவிடும்படியும் கோரப்பட்டுள்ளது.
உரிய நிவாரணம் பெற - பாதிக்கப்பட்ட பெற்றோர்களும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் நிர்ணயக்குழுவிற்கு தங்கள் புகாரை அனுப்புவது அவசியமாகும்.
பெற்றோர்கள் அனுப்பவேண்டிய புகார் கடிதத்தின் மாதிரி வடிவம்:-
இந்த புகாரை அனுப்பவேண்டிய முகவரி:
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus, College Road,
Chennai - 600 006.
பெற்றோர்கள் - இந்த புகாரை, பதிவு தபால் மூலம் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த புகாரின் நகலை - தொடர் நடவடிக்கைக்காக - நடப்பது என்ன? குழுமத்தின் அலுவலகத்திலும் வழங்கலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 28, 2018; 11:45 pm]
[#NEPR/2018042803]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|