தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கும் கூடுதலாக பல பள்ளிக்கூட நிர்வாகங்களால் கல்விக் கட்டணம் பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை கல்விக் கட்டணம் செலுத்தாதோர் செய்ய வேண்டியவை குறித்து காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணம் விபரங்களை நடப்பது என்ன? குழுமம் - சமூக ஊடகங்கள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமும் வெளியிட்டதை தொடர்ந்து, பல பெற்றோர்கள் நடப்பது என்ன? குழுமத்தை தொடர்புக்கொண்டு சில விளக்கங்களை கேட்டனர். அரசு நிர்ணயம் செய்துள்ளப்படி கட்டணங்களை பெற பள்ளிக்கூடங்கள் மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
// விளக்கங்கள் கேட்டவர்களில் ஒரு சாரார் ஏற்கனவே வரும் ஆண்டுக்கான கல்விக்கட்டணம் செலுத்தியவர்கள்
// மற்றொரு சாரார் - இதுவரை கல்விக்கட்டணம் செலுத்தாதவர்கள்
அரசு நிர்ணயித்துள்ள தொகை அளவிற்கு கல்விக்கட்டணத்தை பள்ளிக்கூடங்கள் குறைக்க மறுக்கும் சூழலில் - நடப்பது என்ன? குழுமம், கீழ்க்காணும் ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்குகிறது.
(1) ஏற்கனவே கல்விக்கட்டணம் செலுத்தியவர்களுக்கான ஆலோசனை
நீங்கள் செலுத்திய கல்விக்கட்டணத்திற்கான ரசீதுகள் நகலை இணைத்து, புகார் கடிதத்தை - பதிவு தபால் மூலம் - தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவிற்கு அனுப்பலாம்.
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus,
College Road,
Chennai - 600 006.
இதன் மூலம் - அந்த குழு நடத்தும் விசாரணையை தொடர்ந்து, கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம், திரும்பப்பெற வழிபிறக்கும்
மாதிரி புகார் கடிதம் ஏற்கனவே சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்பட்டுள்ளது.
அதன் நகலை - நடப்பது என்ன? குழுமத்தின் பதிவு அலுவலகத்திலோ (பேருந்து நிலையம் எதிரில், முஹம்மது ட்ராவில்ஸ்), நிர்வாக அலுவலகத்திலோ (துஃபைல் வணிக வளாகம் - முதல் மாடி) பெறலாம்
(2) இது வரை கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களுக்கான ஆலோசனை
இதுவரை கல்விக்கட்டணம் செலுத்தாதவர்கள் - அடுத்த சில தினங்களில் பள்ளிக்கூடம் திறக்கவுள்ளதை கருத்தில் கொண்டு, முதல் பருவம் (FIRST TERM) கல்விக்கட்டணத்தை மட்டும் செலுத்தி - ரசீது பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நகரின் பல தனியார் பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணத்தை பார்த்ததில், அந்த பள்ளிக்கூடங்கள் முதல் பருவத்திற்கு வசூல் செய்யும் தொகையே, ஏறத்தாழ முழு ஆண்டிற்கான, அரசு நிர்ணயித்துள்ள தொகைக்கு சமமாக உள்ளது.
எனவே - முதல் பருவத்திற்கான கல்விக்கட்டணத்தை செலுத்திவிட்டு, ஏற்கனவே தெரிவித்துள்ளதை போல், தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவிற்கு புகாரினை - பதிவு தபால் மூலம் - அனுப்பலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 31, 2018; 9:00 am]
[#NEPR/2018053101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|