CBSE / ICSE பள்ளிக்கூடங்கள் அதிகளவில் கல்விக் கட்டணம் வசூலித்தால் செய்ய வேண்டியவை குறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
2009 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட்டம் - தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவிற்கு (TAMIL NADU PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE), CBSE பள்ளிக்கூடங்களில் கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய அதிகாரம் வழங்கியது.
(3) (3) The fee collected by any school affiliated to the Central Board of Secondary Education shall commensurate with the facilities provided by the school. [Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act, 2009]
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஆர்.சுப்பைய்யா ஆகியோர் - செப்டம்பர் 21, 2012 அன்று வழங்கிய தீர்ப்பில் - இந்த சட்டம், ICSE பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்தனர். [Lakshmi School vs State Of Tamil Nadu]
இருப்பினும், CBSE மற்றும் ICSE தனியார் பள்ளிக்கூடங்களின் கூட்டமைப்புகள் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே, 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் ஒரு பிரிவு மட்டுமே [7(3)] - இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, CBSE / ICSE பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தும் என இடைக்கால தடை உத்தரவினை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இதன் விளைவாக, இந்த குழுவினால் - CBSE / ICSE பள்ளிக்கூடங்களுக்கான கல்விக்கட்டணத்தை தற்போது நிர்ணயம் செய்ய இயலாது.
In modification and supersession of our interim order dated 15.01.2015, we direct that for I.C.S.E. and C.B.S.E. schools, the regulatory mechanism of the Fee Committee shall be limited, during the pendency of the present controversy, to the one contemplated under Section 7(3) of the Tamil Nadu Schools (Regulation of Collection of Fees) Act, 2009. [Supreme Court of India; 28-1-2016]
Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act உடைய பிரிவு 7 (3) என்ன சொல்கிறது?
(3) The Committee shall have power to,
(i) verify whether the fee collected by the School affiliated to the Central Board of Secondary Education commensurate with the facilities provided by the school;
(ii) to hear complaints with regard to collection of excess fee by a school affiliated to the Central Board of Secondary Education; and
(iii) to recommend to the Central Board of Secondary Education for disaffiliation of the school, if it comes to a conclusion that the school has collected excess fee.
அதாவது - தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவானது, CBSE பள்ளிக்கூடங்கள், மாணவர்களுக்கு தாங்கள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கல்விக்கட்டணங்களை வசூல் செய்கின்றனவா என பார்க்கலாம்; CBSE பள்ளிக்கூடங்கள், அதிக அளவில் கல்விக்கட்டணம் வசூல் செய்கின்றன என வரும் புகார்களை விசாரிக்கலாம்; புகார்கள் உண்மையென்றால், அந்த பள்ளிக்கூடத்தின் அங்கீகாரத்தை இரத்து செய்ய, CBSE அமைப்புக்கு பரிந்துரை செய்யலாம்.
CBSE பள்ளிக்கூடங்கள், தாங்கள் வழங்கும் சேவைக்கான கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்கிறார்கள் என்றால் - இது குறித்த புகாரை, கீழ்க்காணும் முகவரிக்கு - விசாரணைக்காக - தெரிவிக்கலாம்.
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus,
College Road,
Chennai - 600 006.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூன் 2, 2018; 9:30 am]
[#NEPR/2018060201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|