ரமழான் மாதம் 17ஆம் நாளில் பத்ருப் போர் நடைபெற்றதை நினைவுகூரும் வகையில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாளையொட்டி நேற்று (ஜூன் 01 - வெள்ளிக்கிழமை) 23.30 மணிக்கு, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் இமாம் ஹாஃபிழ் வி.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ - பத்ரு போர்க்கள சரித்திரத்தை உள்ளடக்கி சிறப்புரையாற்றியதோடு, துஆ பிரார்த்தனையும் செய்தார்.
மவ்லவீ எம்.இசட்.அப்துல் காதிர் மஸ்லஹீ வழிநடத்தலில், பத்ரு ஸஹாபாக்கள் திருநாமம் படிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளனைத்திலும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி தவிர, நகரின் பல பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள் மற்றும் இல்லங்களிலும் பத்ரு ஸஹாபாக்கள் புகழ்பாடும் அமர்வுகள் நடைபெற்றன.
|