ஸ்டெர்லைட் தாமிர உருக்குத் தொழிற்சாலையை எதிர்த்து – 22.05.2018. செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் 13க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று – பொதுமக்கள் நலன் கருதி – தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், வட்டாட்சியர் சிவகாமி சுந்தரி – ஆலையைப் பூட்டி முத்திரையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சார் ஆட்சியர் ப்ரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
|