ஸ்டெர்லைட் தாமிர உருக்குத் தொழிற்சாலையை எதிர்த்து – 22.05.2018. செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் 8க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, தமிழகம் முழுக்க கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, காயல்பட்டினத்தில் இன்று அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டன.
இதனால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் காயல்பட்டினம் முதன்மைச் சாலை (மெயின் ரோடு), கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத் தம்பி சாலை, ஸீ-கஸ்டம்ஸ் சாலை ஆகிய பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில், வணிகர் சங்கம் சார்பில் நாளை (24.05.2018. வியாழக்கிழமை) கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், நாளையும் காயல்பட்டினத்தில் கடையடைப்பு இருக்கும் என அறிய முடிகிறது.
படங்கள்:
A.T.ரியாஸுத்தீன்
|