காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் - அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
தற்போது - தூத்துக்குடி மாவட்டத்தின் 148 தனியார் பள்ளிக்கூடங்களின் மூன்று ஆண்டுகளுக்கான (2017-2018, 2018-2019, 2019-2020) கல்விக்கட்டணம் விபரம், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) மூலம் வெளியாகியுள்ளன.
அதில் - காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கான கல்விக்கட்டணம் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை ஓர் ஆண்டிற்கானது.
இந்த கட்டணத்தை தவிர, பெற்றோர்கள் - *பள்ளிக்கூடங்களுக்கு வேறெந்த கட்டணமும் செலுத்த கட்டாயம் இல்லை.
கல்விக்கட்டணத்திற்குள் - ஸ்மார்ட் கிளாஸ், SMS கட்டணம் போன்ற அனைத்தும் அடங்கும்
பள்ளிக்கூடத்தில் வேன் / பஸ் வசதியை பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தலாம்.
பள்ளிக்கூடத்தில் தான் புத்தகங்கள், இதர ஸ்டேஷனேரி பொருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
இந்த தொகையை விட அதிகமாக பள்ளிக்கூடங்கள் கோரினால், அதற்கான ஆதாரங்களுடன் புகார் எழுதி, கீழ்காணும் முகவரிக்கு, பதிவு தபால் மூலம், பொது மக்கள், புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus,
College Road,
Chennai - 600 006.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 22, 2018; 6:00 pm]
[#NEPR/2018052205]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|