பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC) வழங்கிட, தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து வேறு பள்ளிக்கூடம் மாற - ஏற்கனவே பயின்ற பள்ளிக்கூடத்தில் இருந்து பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TRANSFER CERTIFICATE;TC) பெறுவது அவசியமாகும்.
இன்று முதல் நகரின் பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களில், பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது. TC பெற சென்ற பெற்றோரிடம் அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும், பள்ளிக்கூட நிர்வாகிகளால் - ரூபாய் 200 கோரப்பட்டுள்ளது. இதற்கான எந்த ரசீதும் பள்ளிக்கூடங்கள் வழங்கவில்லை.
இது சம்பந்தப்பாக பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் நகரங்களில் உள்ள கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் நடப்பது என்ன? குழுமம் விபரங்கள் கோரியது.
அதற்கு பதில் வழங்கிய கல்வித்துறை அதிகாரிகள் - இவ்வாறு பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்க, கட்டணம் வசூல் செய்ய எந்த அனுமதியும் இல்லை என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தனர்.
எனவே - பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) வாங்க பள்ளிக்கூடங்கள் செல்லும் பெற்றோர்கள், அதற்காக எந்த கட்டணமும் செலுத்த அவசியமில்லை என்பதனை தெரிவித்து கொள்கிறோம். இதனை மீறி - பள்ளிக்கூடங்கள் கட்டணம் வசூல் செய்தால், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களின் ஆய்வாளர் (விருதுநகர்) அலுவலக எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பெற்றோர்கள் புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
INSPECTOR OF MATRICULATION SCHOOLS (VIRUDUNAGAR)
PHONE NUMBER: 04562 243655
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 21, 2018; 4:00 pm]
[#NEPR/2018042101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|