திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, 28.05.2018. அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, வைகாசி 14ஆம் நாள் திங்கட்கிழமை (28.05.2018.) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும், 28.05.2018. அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Insturment Act) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பகரமாக 09.06.2018. இரண்டாம் சனிக்கிழமையன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|