கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் வரும் 24.05.2018. வியாழக்கிழமையன்று நடத்தப்படவுள்ளது. இதில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். காயலர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், வரும் 24.05.2018. வியாழக்கிழமையன்று 16.30 மணியளவில், நமது மன்றத்தின் சார்பில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன், மன்றத்தின் 33ஆவது பொதுக்குழுக் கூட்டம்,
Vembanad Restaurant,
Barwa Village,
Doha
என்ற முகவரியில் இன்ஷாஅல்லாஹ் நடத்தப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
இந்நிகழ்ச்சியில் - நமது மண்ணின் மைந்தரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், கத்தர் நாட்டிற்கு புதிதாக வந்திருக்கும் காயலர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால், நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளைத் தந்தருள்வானாக ஆமீன்.
குறிப்பு: அனைவருக்கும் சிறப்பான ஏற்பாடுகளை நிறைவாகச் செய்திடும் பொருட்டு, இந்நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் உறுப்பினர்கள்,
(1) Z.M.D.முஹம்மத் அப்துல் காதிர் (தொடர்பு எண்: 33 95 30 37)
(2) ஹாஃபிழ் A.H.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் (தொடர்பு எண்: 55 40 29 91)
3) சொளுக்கு முஹம்மத் இப்ராஹீம் (தொடர்பு எண்: 33 53 86 91)
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொண்டு, தங்கள் வருகையை உறுதிசெய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
|