இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்பு – நிராகரிப்பு குறித்த பட்டியல் மே 24ஆம் நாளுக்குள் வெளியிடப்படுமெனவும், மே 28ஆம் நாளன்று குலுக்கல் மூலம் மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் [மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD)] நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்கீழ், CBSE/ICSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும்.
மே 18 வரை விண்ணப்பங்கள் - மாநிலம் முழுவதும், இணையதளம் வழியாக பெறப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர்கள் / நிராகரிக்கபப்ட்ட மாணவர்கள் பட்டியல், பள்ளிக்கூடங்களின் தகவல் பலகையில் - மே 22 மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதி தற்போது - மே 24 என மாற்றப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் - மே 23 அன்று - ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக முறையான விண்ணப்பங்கள் இருப்பின் - குலுக்கல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதியும் மாற்றப்பட்டு, தற்போது மே 28 அன்று சம்பந்தபப்ட்ட பள்ளிகளில் குலுக்கல் நடக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, காயல்பட்டினத்தில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒரு சிலருக்கு - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், விண்ணப்பம் எண்ணுடன் நடப்பது என்ன? குழுமம் அணுகியது. தவறுதலாக அந்த தகவல் சென்றுள்ளது என்ற விளக்கம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த பெற்றோர்கள், இது போன்ற குறுஞ்செய்தி பெற்றிருந்தால், உங்கள் சந்தேகங்களை கீழ்காணும் எண்ணை - அலுவலக நேரத்தில் தொடர்புக்கொண்டு விளக்கம் பெறவும்:
97888 59168
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 21, 2018; 9:30 pm]
[#NEPR/2018042102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|