கேவலம் சிரிப்புதான் வருது போங்கோ posted byKader Sulaiman (Kayalpatnam)[02 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12761
ஒரு முழு புசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார்கள். பதினெட்டு வார்டுகளில் ஒரு வார்டில் கூட உதயசூரியன் முத்திரையில் போட்டி போடவில்லை. அ.தி.மு.க.வினராவது இரண்டு வார்டுகளில் போட்டி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வினர்க்கு தைரியம் இருந்தால் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட்டுவிட்டு வெற்றி பெற்று இவ்வாறு நன்றி தெரிவிக்கலாம்.
இன்று நடப்பது யாருடைய ஆட்சி தி.மு.கவின் ஆட்சியா. தி.மு.க.ஆட்சியில் இவ்வாறு பெரிய ஏமாற்று வேலையை செய்திருந்தால் நன்கு பாராட்டலாம். ஊருக்கு நல்லது நடக்கனும் என்றால் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்தால் தான் நமக்கு நல்லது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. இந்த வேலையை செய்திருந்தால் பாராட்டலாம்.
என்ன செய்வது காயல்பட்டணத்தில் நடப்பது எல்லாம் ரிமோட் கண்ட்ரோல் வேலைகள். திமுகவின் கோட்டை கலைஞர் பட்டணம் என்று வாய்கிழிய பேசும் இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எந்த திட்டத்தை நமதூருக்கு தந்தார்கள்.
துணைத்தலைவரில் வெற்றி பெற்றவுடன் மாவட்ட செயலாளர் பெரியசாமிக்கு பொன்னாடை போத்தியது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. என்னசெய்வது எல்லாம் சென்னையில் இருந்து காயல்பட்டணத்திற்கு ஏற்பட்ட புயலே காரணம்.
Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byKader Sulaiman (Kayalpatnam)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12691
நகர்மன்ற தலைவி ஆபிதாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நகர்மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களோடு மக்களாக ஒன்றினைந்து மக்களுக்காக பாடுபடவேண்டும். அப்போதுதான் நல்ல திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்ற முடியும்.
எனவே ஆபிதா மக்களோடு மக்களாக பணியாற்றுவதால் ஒரு முன்மாதிரி நகராட்சியை உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKader Sulaiman (Kayalpatnam.)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10939
அரசாங்க விதிகளின் படி பிரச்சாரம் ஓய்ந்தது. ஆனால் காயல் பாதுஷாக்களின் பணவேட்டை புறநகர் பகுதிகளில் இப்பொழுதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. புறநகர் மக்களுக்கு இன்று இரவுதான் பௌர்ணமி.
Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byKader Sulaiman (Kayalpatnam)[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10372
குடாக் புகாரி அவர்களே மெகா நிகழ்ச்சியில் ஜமாத் ஆதரிக்காத ஆபிதா அவர்களை எப்படி மேடை ஏற்றினார்கள் என்று கேட்கிறீர்கள். அனைத்து ஜமாத் சார்பில் மிஸ்ரிய்யா அவர்களை நிறுத்தி இருப்பதாக சொல்கிறீர்கள். ஐக்கிய பேரவை நடத்திய ஊமைத் தேர்ததில் அனைத்து ஜமாத்களும் பங்குபெற்றனவா என்பதை பாருங்கள். கடைப்பள்ளி மற்றும் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார்பள்ளி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. விளையாட்டு சங்கங்களுக்கும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களுக்கும் வாக்கெடுப்பில் உரிமை. இது என்ன நியாயம்.
ஊரில் 28 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் உள்ளன. இதில் மாற்றுமதத்தை சார்ந்தவர்களின் வாக்குகளும் அடங்கும். ஊருக்கு பொதுவான வேட்பாளரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் ஊரில் உள்ள அனைத்து ஜமாத்களும் ஒன்று கூட விடுபடாமலும், அனைத்து சமூதாய மக்களின் ஆதரவும் இருந்தால்தான் பொது வேட்பாளர் என்று சொல்ல முடியும்.
ஆதரி;த்த அனைத்து ஜமாத்துக்களிலும் அந்தந்த ஜமாத்திற்குள் பிரச்சனை மற்றும் மனக்கசப்பு இந்த சூழ்நிலையில்; எப்படி பொது வேட்பாளர் என்பது சாத்தியமாகும் சற்று சிந்தித்து பாருங்கள்.
நான் ஏற்கனவே இதே செய்தியில் இரண்டாம் நம்பர் கமெண்ட்டில் கூறியிருக்கிறேன். சகோதரி மிஸ்ரிய்யா அவர்களுக்கு அவர்களது கணவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆமீனா பள்ளியில் நடைபெற்ற நான்காவது வார்டு கவுன்சிலரை ஜமாத் சார்பாக தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் போட்டியிட்ட மூன்று நபர்களுள் மிஸ்ரிய்யா அவர்களும் அடங்கும்.
அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். எனவே ஹக்கை புக்கில் பதியுங்கள்.
Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byKader Sulaiman (Kayalpatnam.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10322
மெகாவின் முயற்சி மெகா சூப்பர். ஐக்கிய பேரவை சார்பில் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் மிஸ்ரியா அவர்கள் ஏற்கனவே 4வது வார்டுக்கு போட்டியிட ஆமினாபள்ளி சார்பில் நடத்தப்பட்ட பொதுவேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட மூன்று நபர்களில் மூன்றாவதாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட... posted byKader Sulaiman (Kayalpatnam)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10264
கலீபா செய்யது முஹம்மதுவின் அறிக்கை மிக மிக சூப்பர். அன்றைய ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்களில் நானும் ஒருவன். அவர் கூறியதை போல் 80 சதவீதம் இல்லை 90 சதவீதம் பேர் ஜமாத் தேர்தல் விசயத்தில் தலையிடவேண்டாம் என்றோம். புதுப்பள்ளி ஜமாத் என்பது இருவர் கமிட்டி அல்ல. அப்படி தேர்தலில் தலையிட வேண்டும் என்றால் ஜமாத் மக்களின் ஒட்டு மொத்த முடிவையும் மற்றும் மருத்துவர் தெருவில் உள்ள மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் கேட்டு அதன் பிறகு தான் முடிவெடுக்க வேண்டும். அதுதான் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அழகு. ஆனால் இங்கு நிர்வாகத்தில் உள்ள இருவர் மட்டும் புதுப்பள்ளி நிர்வாகத்தை குட்டி ஐக்கியப் பேரவையாக மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். புதுப்பள்ளியில் ஜமாத் தேர்தல் என்று ஒரு பொய்யான தேர்தலை நடத்திவிட்டார்கள்.
அன்று நடைபெற்ற ஜமாத் கூட்டத்தில் தலைவி தேர்தலைப்பற்றி எந்த பேச்சும் பேசாமல் ஒருதலைபட்சமாக ஜமாத்தில் உள்ள முக்கிய இரண்டு நபர்கள் மட்டும் உங்கள் இஷ்டத்திற்கு ஜமாத்தார்களின் கருத்துக்களை கேட்காமல் தன் இஷ்டத்திற்கு ஐக்கியப் பேரவை நிறுத்திய தலைவிக்கு எப்படி ஆதரவு அளித்தீர்கள். இக்கேள்விக்கு நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அல்லாஹ்விற்கு பயந்து நிர்வாகம் செய்யுங்கள். இந்தியாவில் நடப்பது மக்கள் ஆட்சி மன்னராட்சி அல்ல.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKader Sulaiman (Kayalpatnam.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10253
காயல்பட்டினத்திற்கு வெளியில் இருந்து கொண்டு இங்கு நடப்பது என்ன என்பது கூட தெரியாமல் தங்கள் அமைப்பின் மூலம் கொடுமையான ஒரு முடிவை எடுத்துவிட்டீர்கள். ஒருமுடிவை எடுக்கும் முன் இங்குள்ள நபர்களிடம் பெரும்பாலானோரின் கருத்துக்களை கேட்டுவிட்டு அதன் பிறகு கூடி முடிவெடுக்க வேண்டும். இன்று எல்லா நலமன்றங்களும் பேரவையின் பக்கம் செவிசாய்ப்பது சரியல்ல. ஒரு நேர்மையான இயக்கமாக இருந்தால் பேரவையின் பக்கம் குற்றம் இருந்தால் அதை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். எல்லோரும் செம்மறி ஆட்டுக்கூட்டமாக மாறக்கூடாது. தவறை திருத்த முயற்சி செய்யுங்கள்.
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட... posted byKader Sulaiman (Kayalpatnam)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10252
காயல்பட்டணத்தில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி தொடர வேண்டும் என்றால் சமூக சேவகி ஆபிதா மேடத்தை சேர்மனாகவும், லுக்மான் காக்காவை துணை சேர்மனாகவும் ஆக்கவேண்டும். அப்போது தான் இந்த காயல் செழிக்கும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை. மக்களே புரிந்து செயல்படுங்கள்.
Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted byKader Sulaiman (Kayalpatnam.)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10186
ஓட்டு போடும் பொதுமக்கள் ஆறு வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்புடைய இரண்டு வேட்பாளரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். யாருடைய நிர்பந்தத்திற்கும் ஆளாகாதீர்கள்.
நிர்வாகத் திறமை உள்ள, படித்த, சமூக பணிகளில் ஆர்வமுடைய ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் முந்தைய காலங்களில் ஏதேனும் சமூக பணிகள் ஆற்றியவரா அல்லது வீட்டு சமையல் கட்டில் வேலை செய்பவரா நகராட்சிக்கு வரவேண்டும் என்பதை சிந்தித்து சுயமாக முடிவெடுங்கள்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKader Sulaiman (Kayalpatnam)[04 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9562
ஐக்கியப் பேரவை என்ன ஐநா சபையின் அங்கமா. இந்திய திருநாட்டில் யார் வேட்டுமானாலும் தேர்தலில் போட்டி போடலாம். எல்லோருக்கும் உரிமை உண்டு.
இங்கு புதுப்பள்ளி ஜமாஅத்தில் உள்ள தலைவர் உட்பட சிலர் ஐக்கியப் பேரவையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள். புதுப்பள்ளியில் நடைபெற்ற பொதுக்குழுவில் 80 சதவிகிதம் பேர் ஜமாஅத் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என்று கூறியும் அதற்கு முக்கியஸ்தர்கள் ஐக்கியப் பேரவையின் நிர்பந்தம் என்று கூறி அநியாயமாக ஜமாஅத்தை பிரிக்க பார்க்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் அடிக்கடி தைக்கா தெருவில் உள்ள ஒரு முக்கியஸ்தர் வீட்டில் ஐக்கியப் பேரவையின் கதாநாயகன் அடிக்கடி மீட்டிங் போடுவார்கள். புதுப்பள்ளியில் நடக்கும் சம்பவங்கள் யாவும் தலைவர் மற்றும் நான்கு முக்கியஸ்தர்களுக்கு மட்டும்தான் தெரியும். எந்த ஒரு நடவடிக்கைகளையும் செயலாளர் பொருளாளர்களிடம் கலந்து ஆலோசிப்பது கிடையாது. தான் தோன்றித்தனமாக செயல்படுவதுதான் புதுப்பள்ளி ஜமாஅத்தின் வேலை. அன்று கூடிய பொதுக்குழுவில் தலைவிக்கு வாக்களிப்பதை பற்றி எந்த ஒரு பேச்சும் பேசவில்லை.
அவர்களாகவே நம் ஜமாஅத்தை சார்ந்த நல்ல ஒரு திறமையான வேட்பாளரை விட்டுவிட்டு ஐக்கியப் பேரவையின் நிர்பந்தத்தினால் மற்றொருவரை ஆதரிக்கிறார்கள். கூடிய விரைவில் நீங்கள் போடும் கணக்கு தப்புக்கணக்காகும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross