செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதர் கான் (கான் சார்) காலமானார்! மார்ச் 24 வெள்ளி அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySHAJAHAN (DAMMAM)[25 March 2017] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45380
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .
எனது நண்பன் umarsulaiman khan உடைய காக்கா மரணம் என்னை மிகவும் அதிர்ச்சி ஆக்கியது.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். குடும்பத்தார்கள் ஸபூர் செய்து கொள்ளவும் .
Re:... posted bySHAJAHAN (DAMMAM)[14 January 2017] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45107
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக ஆமீன்.
Re:... posted byS.M.D.SHAJAHAN (DAMMAM)[05 September 2016] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44590
முதன்முதலில் தமிழின் தொடக்கமான ‘அ’ போடச் சொல்லித் தந்த அப்பா, அம்மாதான் நம்முடைய முதல் ஆசிரியர்கள். பழக்கமே இல்லாத முதல் நாள் பள்ளிக்கூடத்தில், அழும் குழந்தையை அரவணைப்போடு, இனிப்புக் கொடுத்து கல்வி போதிக்க அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்.
கனிவும், கண்டிப்பும், அரவணைப்பும், புதிது புதிதாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் உற்சாகமும்தான், இன்று அப்துல்கலாம், ரகுராம் ராஜன், மயில்சாமி அண்ணாத்துரை என்று எத்தனையோ அறிஞர்களை நம்மிடையே உருவாக்கித் தந்திருக்கிறது.
கைப்பிடித்து எப்படி நடக்க வேண்டும் என்பது தொடங்கி, கையெழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுவரை நம்மை செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.பத்தில் எட்டு பேருக்காவது அடிக்கடி ஆசிரியர் வீட்டுச் சாப்பாடு கிடைத்திருக்கும். இன்றும் முகத்தில் கண்டிப்பையும், உள்ளத்தில் அன்பையும் வைத்துக் கொண்டு, கையில் பிரம்புடன் மாணவர்களை விரட்டி, விரட்டிப் படிக்க வைக்கும் நல்லாசிரியர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.
22 வருடங்களாக ஆசிரியர் பணி செய்து, தனக்கென்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் வறுமையில் வாடும் ஆசிரியருக்கு, தன்னுடைய மாணவன் இன்று கம்பீரமான, கெளரவமான பதவியில் இருக்கின்றான் என்கிற ஒரு தகவல் போதும்....அத்தனை பசியிலும் அவர் முகத்தில் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த!
நம்முடைய உள்ளார்ந்த அறிவாற்றலைக் கண்டறிந்து ’இதுதான் உனக்கு சரியான பாதை’ என்று வழிகாட்டிய ஆசிரியர்கள்தான் இன்று நம்மில் எத்தனையோ பேர் அவரவருக்கு விருப்பமான துறைகளில், தகுதியான வேலையில் அமரக் காரணம்.
தமிழையும், கணிதத்தையும், அறிவியலையும் ஆணிவேரில் இருந்து ஆசிரியர்கள் கற்றுத் தந்திருக்காவிட்டால், இங்கு விஞ்ஞானிகளும், கணிதவியலாளர்களும், மென்பொருள் வல்லுனர்களும், பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் இல்லாமலேயே போயிருப்பார்கள்.
எத்தனை மாணவர்கள் இருந்தாலும், அத்தனைப் பேரையும் தான் பெற்ற பிள்ளைகளாய் நினைத்து அறிவூட்டி வளர்த்த எல்லா ஆசிரியர்களுமே கொண்டாடப்பட வேண்டிய ‘நல்லாசிரியர்கள்’தான்.
உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆசிரியர் உந்துதலாய், உத்வேகமாய் இருந்திருப்பார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களை எப்பாடு பட்டாவது தேடிக் கண்டறிந்து, ஒரு வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்நாள் பரிசாய் இருக்கும். ஏற்றிவிட்ட ஏணிப் படிகளுக்கு காணிக்கை செலுத்தும் நாள் இன்று!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross