Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:47:42 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஅமீர் சுல்தான்
Placeசவுதி அரேபியா
Approved Comments9
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: டிசம்பர் 30-ல் DCW ஆலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்திற்கு சுற்று வட்டார ஊர்களின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தது SDPI! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அமீர் சுல்தான் (சவுதி அரேபியா) [23 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38544

SDPI கட்சியின் முற்றுகை போராட்டத்திற்கு சுற்றுவட்டார மக்களின் ஆதரைவ பெறுதற்கான பிரச்சாரம் நல்லதொரு முயற்ச்சி. முற்றுகை போராட்டம் வெல்லட்டும்.

DCW ஆலைக்கொதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நாகர்ந்திருப்பதோடு முதல் வெற்றியும் கிடைத்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் உயிர் கொல்லி ஆலை கூலிக்கு ஆள் அமர்த்தி கலெக்டரிடம் மணு கொடுத்ததும், நமதூர் பற்றி பிறபகுதிகளில் அவதூறு நோட்டீஸ் ஒட்டியதும்.

போராட்டம் வீரீயமடையும் போது ஆலையை மூடுவதும் சாத்தியமாகும்.இன்ஷா அல்லாஹ். இதற்கு நமதூர் மக்களும் சுற்று வட்டார மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

ஆனால் முற்றுகை போராட்டம் நடைபெறும் நாட்களுக்கு முன்னும் அதே நாளன்றும் சகோதர அமைப்புகள் வேறு காரணங்களுக்காக கூட்டங்களை அறிவித்திருப்பது சற்று நெருடலாகவே படுகின்றது.

உயிர் கொல்லி ஆலையை விரட்டுவதில் தயக்கமா? என்ற கேள்விதான் தொக்கி நின்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அப்பாபள்ளியின் முன்னாள் மேலாளர் நெய்னா மரைக்கார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம...
posted by அமீர் சுல்தான் (சவுதி அரேபியா) [17 April 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18317

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..........

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்று பாவங்களையெல்லாம் மன்னித்து அருள் புரிவானாக.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ், ஸப்ர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
Re:இதில் என்ன தவறு?...
posted by அமீர் சுல்தான் (சவுதி அரேபியா) [03 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17367

பின்கோடு - 628204 என்று இருக்கவேண்டும். ஒரு 2 கூடுதலாக இருக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கூடங்குளமும், காயல்பட்டினமும்! (பகுதி-1) [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளமும், காயல்பட்டின...
posted by அமீர் சுல்தான் (????? ???????) [02 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20581

அணுஉலை கூடாது என்ற போராட்டம் தேவையற்றது; கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்பட வேண்டும் - இ.யூ. முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். இந்த அறிக்கையை பத்திரிகையில் பார்த்தபோது சற்று அதிர்ச்சிதான். இருந்தாலும் மக்களின்மீது அக்கறை கொள்ளாத சாதாரண அரசியல்வாதிதானே அவரும் என்ற மனநிலையே ஏற்பட்டது. அது போன்றே இந்த லீக்கினர் காயலிலும் விவாதிக்க இருக்கும் நிலையில் அணுஉலை பற்றிய புள்ளி விபரங்களோடு எழுதப்பட்ட சகோதரர் பசீர் அவர்களின் கட்டுரை மிக்க தேவையானதே.

இது தொடர்பான கருத்தை பதிவுசெய்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அணு உலையின் விபரீதங்கள் பற்றி அறியவில்லையோ என்ற சந்தேகம்தான் எழுகின்றது.

அனல் மின் நிலையத்தை அணு உலையோடு ஒப்பீடு செய்யும் போது அணு உலையின் விபரீதம் மிகக் கொடுரமானது. அலைஉலையின் கழிவுகள் 48 ஆயிரம் ஆண்டுகள் வீரியமிக்கது. அதனை அழிக்க முடியாது. கழிவுகளை கையாளும் விதம்பற்றியும் இன்னும் தெளிவில்லை. கான்கீரீட் அடைப்புக்குள் வைத்து கடலில் தாக்கப்போவதாகவும் பரவலான செய்திகள்.இருப்பினும் அதன் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.(DCW வினால் அவ்வப்போது நமது கடல் செங்கடலாகும் ..அதைவிட பல ஆயிரம் இல்லை இல்லை கோடி மடங்கு அபாயமானது அணு உலை கழிவுகள்..)

30 , 40 ஆண்டுகள் பயன்படுத்திய பின் அதனைஉலைகளை சாதரணமாக மூடிவிட்டு சென்றவிட முடியாது அதனை பல ஆண்டுகள் பல கோடி செலவிலே பாதுகாக்க வேண்டும். இந்த உலை நம்மையும் அழிக்கும் நம்முடைய சந்ததிக்கும் உலை வைக்கும்.

இன்றைய மின்வெட்டு இது செயல்படாததால் அல்ல...இது மத்திய மாநில அரசுகளின் சதி. மேலும் ஒருவேளை இன்று முதல் செயல்பட ஆரம்பித்தாலும் இதிலிருந்து மின்சாரம் கிடைக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்.

அதுபோன்று அப்பாவியாய் ஒரு கேள்வியையும் தொடுத்திருக்கின்றார் சகோ.ஹபீப் ரஹ்மான் அவர்கள். 25 ஆண்டுக்கு முன் ஏன் எதிர்க்கவில்லை என்று..

அன்றே ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒருங்கினணக்கப்படவில்லை. அணுஉலையின் விபரீதமும் அந்த மக்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இடிந்தகரை ஒரு கிராமம். மேலும் இது அங்குள்ள மக்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளும் நில மதிப்பு உயர்தல் போன்ற தற்காலிக நன்மைகள் பின்வரும் விளைவுகளை மறைத்திருக்கக் கூடும்.

புகுஷிமா அணுஉலையின் விபத்திற்குபின் அதன் பேரழிவு பரவலாக பேசப்பட்டது. அணுஉலை பற்றிய விழிப்புணர்வும் எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டது, அதனால் அதனை எதிர்கின்றனர்.

௧.இந்தியாவில் பலகோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் போலி மத நம்பிக்கை அடிப்படையில் கைவிடப்பட்டதே! இது நமனைவரும் அறிந்ததே.
௨. பல இலட்சம் கோடிகள் 2 ஜி யில் கொள்ளையடிக்கப்பட்டதே அந்தப்பணத்தை கொண்டு இதுவரை எந்த முயற்ச்சிகளும் எடுக்கப்படவில்லையே
௩.அடுத்தடுத்த விசாரணைகளில் உள்ள பல கோடி கொள்ளை, கருப்பு பணம், நில மோசடி, வரிபாக்கி இப்படி ஏராளம் கோடிகள் விரயமாகிக் கொண்டுதானே இருக்கின்றது.... அது போன்று சந்ததிகளை கொல்லும் திட்டத்தை தடுப்பதில் ஏற்பட்ட கோடிகள் ஒன்றும் இழப்பாக தெரியவில்லை.

கல்வியாளர்களும் பணமுதலைகளும் நிறைந்த காயல் பதியில் DCW அணுதித்துள்ளோமே...அதனால் கேன்சரும் கொடிய நோய்களும் ஏற்படும்போது இப்போது எதிர்கின்றோமே இதுபற்றிய தங்களது கருத்து...

DCW க்கு எதிராக தொடரான. பரவலானதொரு போராட்டத்தை தாங்களும் ஆரம்பியுங்கள் மகஇக கூடங்குளத்தில் மட்டுமல்ல கல்பாக்கத்திலே தங்களுக்காக நிதி திரட்டி தருவார்கள். . போராட்டம் வீரியமடையும் போது ஒரு உதயகுமாரல்ல பல உதயகுமார்கள் வருவார்கள்.

அமீர் சுல்தான்
சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பேருந்து நிலையம் அருகில் - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பரப்புரை! நிதி தர மறுத்த வணிகர்களுடன் வாக்குவாதம்!! பரப்புரையாளர்களை காவல்துறையினர் திருப்பியனுப்பினர்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பேருந்து நிலையம் அருகில் ...
posted by அமீர் சுல்தான் (சவுதி அரேபியா) [10 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16705

காயல்பட்டினம் பற்றிய இந்த செய்தி பெரும்பாலும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. சம்பவம் உண்மையாயினும் அது நடைபெற்ற பின்னணியையும் அலச வேண்டியுள்ளது.

பத்திரிகைகளில் வரும் அனைத்து செய்திகளையும் உண்மையே என்று நம்பும் சகோதரர்களுக்கு..... கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதற்காக அரசும் ஊடகங்களும் தற்போது பாசிச வகையறாக்களும் களத்தில் குதித்துள்ளனர். அதற்காகவேண்டியே போராட்டக்களத்தில் முனைப்புடன் செயல்படும் திரு.உதயகுமார் அவர்களை நாகரீகமற்ற வார்த்தைகளால் வசைபாடியும், அவருக்கு அமெரிக்க பணம் வருகின்றது, அன்னிய நாடுகள் துணைபுரிகின்றது என ஏக வசனத்தில் எழுதித்தள்ளுகின்றது தினமலர் போன்ற தரம் தாழ்ந்த பத்திரிகைகள். அதற்கு நம்மின் சகோதரர்களும் நம்பி தங்களது கருத்தாக பதிப்பது வேதனையளிக்கின்றது.

சதாரண வேதியியல் பொருட்களும் கொஞ்சம் மின்சாரமும் தயாரிக்கும் அருகிலுள்ள தாரங்கதார கெமிக்கல் மூலம் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் ஏராளம் ஏராளம். அணு உலை மூலம்.......நினைக்கவே குலைநடுங்குகிறது....

அவ்வப்போது நம் கடல் செங்கடல் ஆகின்றது...அணுஉலை கழிவுகளால் நம் கடல் சாக் கடல் ஆகிவிடும்...

சகோரதர்களே....

பேருந்து நிலையத்திலிருந்து அணுஉலையை எதிர்ப்பு பரப்புரையை செய்த மகஇக தோழர்களை விரட்டிவிட்டவர்கள் நிச்சயமாக காவி சிந்தனைகளால் மூலைசளவைச் செய்யப்பட்ட வியாபாரிகளாகத்தான் இருக்கவேண்டும். சமீபத்தில் நெல்லை கலக்டர் அலுவலக வளாகத்தில் பெண்களிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னணியினரை பற்றிய செய்திகள் வெளிவந்ததை அறிந்திருப்பீர்கள். இவர்கள் அடிவாங்கிய காரணம் அணுஉலை எதிர்ப்புக்குழுவுக்கு எதிராக செயல்பட்டதுதான்.

இங்கே அணுஉலை பற்றிய சிறு தொகுப்பு நம் சகோதரர்களுக்காக..

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணுஉலை விபத்துக்குப் பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ரஷ்யா முடிவெடுத்த போது அதில் ஒன்றை இந்தியாவிற்கு விற்றது.இதற்கான ஒப்பந்தம் 1988ம் ஆண்டு இராஜீவ் - கோர்பசேவ் இடையே கையெழுத்தானது.கூடங்குளம் பிரச்னைக்கான மூலம் இங்கிருந்துதான் துவங்குகி;ன்றது. பத்தாண்டுகளாக கிடப்பிலிருந்த இத்திட்டத்தை 2001 இல் மீண்டும் துவங்கினார்கள்.இந்த அணுஉலையின் அபாயங்கள் பற்றி நிபுணர்கள் நிறையபேர் அச்ச உணர்வை வெளியிட்டு இருக்கிறார்கள்.இதற்காக மொத்த தாமிரபரணி நீரில் பாதியும் பேச்சிப்பாறை அணையின் நீரும் தேவைப்படும்.மேலும் கூடங்குளமானது தென்னகத்தின் பூகம்ப பாதையில் உள்ளது.2006ம் ஆண்டு இருமுறை மெல்லிய நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.இதனால் அணுஉலையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்துள்ளன.இந்த அணுஉலையை நிறுவுவதற்காக கூடங்குளத்தை ஒட்டியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள பகுதியில் வசிக்கும் 10 இலட்சம் மக்களையும் பாதிப்புகளை முன்னிறுத்தி வெளியேற்ற வேண்டும். அணுமின் நிலைய கழிவுகள் ரஷ்யாவிற்கு எடுத்துச்செல்லப்படும் என்ற ஒப்பந்தம்,இந்திய அரசின் பலகீனத்தால் இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் என்று உருமாறிய போது நிபுணர்கள் அச்சம் கொண்டனர்.காரணம் 120 கடல் மைல் சுற்றளவு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிடும்.மீனவர்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமவாழ் மக்கள் பலர் பல ஆண்டுகளாக கேன்சர் உள்ளிட்ட கொடிய வியாதிகள் உடல் அங்ககீனம் மூளை பாதிப்படைந்த குழந்தைகள் பிறத்தல் போன்ற இன்னோரென்ன பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்பதை அரசும் சுற்றுப்புற செயல்பாட்டாளர்களும் நன்றாகவே அறிவர்.இவை அப்படியே கூடங்குளத்திற்கும் பொருந்தும். ஆமெரிக்க ஜெர்மன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளெல்லாம் அணுமின் திட்டங்களை கைவிட்ட நிலையில் மக்களின் நலனின் கொஞ்சம் கூட அக்கறையில்லாத இந்திய அரசு இத்திட்டத்திற்கு அணுமதியளித்துள்ளது.இவற்றினுடேதான் கூடங்குளம் பிரச்னையை அணுகவேண்டும்.

17000 கோடிக்குமேல் செலவான திட்டச் செலவைப்பற்றி பலர் அங்காலாய்கின்றனர்.அரசும் இதனையே கூறுகின்றது.ஏறக்குறைய 2இலட்சம் கோடியை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோட்டைவிட்டவர்கள் கூறுவதுதான் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.மக்களுக்காக திட்டங்களா?திட்டங்களுக்காக மக்களா?அரசின் போக்கு புரியவில்லை எரிபொருள் பற்றாக்குறை மின்சார பற்றாக்குறை இந்தியாவின் முக்கிய பிரச்னை என்பதை எவரும் மறுக்க முடியாது அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே.ஆகால் நம்முடைய மின்சார பற்றாக்குறையை தீர்பதற்கு அணுஉலைகள் மட்டுமே வழி என்பதை ஏற்கமுடியாது

இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுக்கவே அணுஉலைகள் ஆற்றல் உற்பத்திக்கு இலாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்துவிட்டார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் அணுகழிவுகளை பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள்ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால் அணுஉலைகள் மிக மிக அதிகமாக செலவு பிடிப்பவை என நீருபிக்கப்பட்டுள்ளது.

அணுஉலைகளுக்குத் தேவைப்படும் பிரமாண்டமான முதலீட்டையும் தொடரும் நிருவாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்தி முறைகளுக்கு செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள் தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும் இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும் போது ஏற்படும் இழப்புதான்.இன்னொன்று மின் திருட்டு.ஆக நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம்.இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுபாடு பெருமளவு நீங்கிவிடும்.

அடுத்து இந்த அணுஉலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன.இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குதான் சென்று சேர்கின்றன.அந்நாடுகள் தங்களது காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கினறன.அதற்கு ஈடாக பெரும் பணம் பெற்றுக்கொள்கின்றன.பேரங்கள் இராணுவ ரகசியங்களாக எஞ்சுகின்றன.

இந்தியாவில் எந்த அணுஉலையும் அதன் முழுத்திறனுடன் செயல்பட்டதில்லை.அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் கணக்கிட்டால் நீர் மின்சாரத்திற்கு ஆகும் செலவைவிட 50 மடங்கு அதிகம் ஆகவே அணுஉலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையில்லை அவை இந்த நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.

அன்புடன்

அமீர் சுல்தான், சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புனித மக்கா காயல் தன்னார்வ மற்றும் வழிகாட்டு அமைப்பு குறித்து ஜித்தா காயல் நற்பணி மன்றம் அறிக்கை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புனித மக்கா காயல் தன்னார்...
posted by அமீர் சுல்தான் (கிழக்கு மாகாணம், சவுதி அரேபியா) [06 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15622

அல்லாஹ்வின் விருந்தாளிகளை வரவேற்பதற்கு, வழிகாட்டுவதற்கு மற்றும் உதவிகள் செய்வதற்கு முன்வந்திருக்கும் ஜித்தா காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துகள் பல.

இந்திய மக்களின் தன்னார்வ தொண்டு அமைப்பான இந்திய ப்ரட்டர்னிட்டி பாரம் (IFF) கடந்த 6 (அ) 7 வருடங்களாக ஹஜ் பயணிகளுக்கு சேவைகளை செய்துவருகின்றது.அதில் காயல் மக்கள் பலரும் தொண்டாற்றி வருகின்றனர். அவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்.

1.ஹஜ்ஜிற்கு வரும்முன்பே அவர்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.உதாரணத்திற்கு - நடைபயிற்சி மேற்கொள்ளுதல். உணவு முறைகள்.

2.கூடாரம் பற்றிய வரைபடத்தினை அவர்களுக்கு விளக்குதல். ௩. எந்நேரமும் அணிந்திருக்க வேண்டிய விபரம் பதிந்த கைப்பட்டைகள். (குளிக்கவோ, கழிப்பிடம் செல்வோர் கழட்டடி வைத்துவிட்டு பின்னர் மறந்து விடுகின்றனர்).

3.நெரிசல் மிகுந்த பகுதிகளில் குறைந்த அளவிலான பொருட்களையும் பணத்தை கொண்டு செல்ல அறிவுரை வழங்குதல்.

4.ஹாஜிகள் வழமையாக உட்கொள்ளும் மருந்துகளை அங்கிருந்தே கொண்டுவர அறிவுரை வழங்குதல் அந்த மருந்து சீட்டுகளையும் மெடிக்கல் ரிப்போர்ட்களையும் கொண்டுவரச் செய்தல்.

5.நோய்கள் பரவுவது உணவுகள் மூலம்தான் எனவே மூடப்படாத சுகாதரமற்ற உணவுகளை தவிர்க்கச் சொல்லுதல்.

6.மக்கா,மதீனா மற்றும் கூடாரங்களில் வழிதவறிவிட்டால் பதற்றமடையாமல் இருக்க அறிவுரை வழங்குதல்.

7. தங்களின் தன்னார்வக்குழுக்கான (help desk) அலைபேசி எண்ணை அனைவரிடமும் கொடுத்தல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by அமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு) [05 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15585

அன்பின் சகோதரர்களுக்கு. அஸ்ஸலாமு அலைக்கும் .

சகோதரர் ஒருவர் எனது கருத்தை மேற்கோள் காட்டும்பொழுது நான் புதிய யுக்தியில் இறங்கியுள்ளதாக எழுதியுள்ளார்.மேலும் சில சகோதரர்களின் கருத்துகளில் சில தவறான தகவல்களையும் அளித்துள்ளனர். நான் இங்கு எதிர்வாதம் புரிவதற்காக எழுதவில்லை. மிகுந்த வேலைபளுவுக்குமிடையில் தவறான கருத்துகள் பரப்ப்ப்படுகின்றனவே என்ற அடிப்படையில்தான் எழுதுகின்றேன்.

சகோதரரே நான் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன். மாற்றுவழிப்பாதை சின்ன நெசவுத் தெருவையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பது என்போன்றோரின் அவா.இது புது யுக்தியாக இருக்கலாம் நிச்சயமாக இது குயுக்தி இல்லை.

வாகன நெரிசல் மிகுந்துள்ள இக்காலத்தில் ஒருவழிப்பாதை அவசியம்தான். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்வதெல்லாம் நமது பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் (பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ஒருவழிப்பாதைக்குமே இடைஞ்சல்தான்). ஆனால் விவாதங்கள் திசைமாறி செல்கின்றது. இதையே சாக்காக கொண்டு சிலர் தனிநபர்களையும், சமுகத்தையும் பழங்காலச் சொற்களால் தாக்கிக்கொள்ளும் அவலமும் நடைபெற்று வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. இது ஒற்றுமையுள்ள இரு ஜமாஅத்துகளிடையே கலகத்தை மூட்டும் செயலாக அமைகின்றது. இது உடனே தடுக்கப்பட வேண்டிய செயல். இரு ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் உடனே சந்திக்க வேண்டும், அவர்கள் தங்களுக்கிடையே உள்ள கருத்துகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் இரு ஜமாஅத்தின் நல்உறவுகள் முன்பு போன்றே தொடரவேண்டும்.

அடுத்ததாக பெரிய, சின்ன நெசவுத் தெருக்கள் புது குடியேற்றங்கள் என கருத்து பரப்ப்ப்படுகின்றது. காயல்பட்டின வரலாற்றை ஆராய்ந்தால் தெரியும் பழமையான தெருக்கள் எவை என்றும் புதிய குடிகள் எவை என்றும்.

உதாரணத்திற்கு நெசவுத் தெரு, கோமான் தெரு, பரிமார் தெரு, கிராம முனிசிபல் கச்சோரி தெரு (KMK Street) (கச்சேரி என்பது மக்கள்கூடும் இடம் நம்மில் சிலருக்கு பாட்டுகச்சேரிதான் ஞபாகம் வரும்). செக்கடி தெரு (அலியார் தெரு), சித்தன் தெரு, கருத்த தம்பி மரைக்காயர் தெரு (KTM Street) (இன்னும் சில) ….இப்படி சில தெருக்களே பழமை வாய்ந்தவை. இங்குள்ள திருமண முறைகள் இன்றும் நபிவழிப்படி பேணப்பட்டு வருகின்றது. (மஸாயிலுக்குள் நுழையவில்லை கருத்து வந்ததால் பதிவு செய்கிறேன்.). இதுதான் நடைமுறையில் இருந்தது பின்னர் காலப்போக்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டது. புதிய தெருக்களும் வந்தன. (நிற்க)

ஒருவழிப்பாதைக்காக தவறான புரிதல்களால் ஒருவரையெருவர் சாடிக் கொள்வது சிறந்த முன்னுதாரமாக தெரியவில்லை. நமதூர் மக்கள் ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களில் தியாகங்களை புரிந்துள்ளனர். தியாகங்கள் பற்றி விவாதிக்கும் தருணமே தளமே இதுவல்ல. மாறாக பொதுமக்கள் பாதிக்காவண்ணம் கலந்துபேசி சுமூகமான தீர்வு எடுக்கப்பட வேண்டும்.

தற்போது முஸ்லிம்கள், இந்திய அளவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். பாசிச சக்திகளும், ஊடகங்களும் முஸ்லிம்கள்மேல் பழிசுமத்தும் போக்கை கடைபிடித்து வருகின்றன. மேலும் ஒரு கூட்டம் முஸ்லிம்களை உயிராலும் பொருளாலும் மானத்தாலும் கறுவருக்க துடித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஒருபுறம்.

மேலும் தமிழகத்தில் அணுஉலையை நிறுவ இந்திய அரசே முன்கை எடுக்கின்றது, அணுஉலை கூடங்குளத்திற்கு வந்தால் காயல்பட்டினத்தின் சுகாதரத்திற்கும் உலைதான், DCWவின் பாதிப்பிலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை இதில் இதுவும் வேறு. நம்முடைய போராட்டங்களெல்லாம் மேற்கூறியவைகளை நோக்கி திரும்ப வேண்டுமே தவிர மாறக அற்பவிஷயங்களுக்காக போராட்டத்தை திசைதிருப்புவது சரியல்ல.

ஒருவழிப்பாதைக்கான அனைவர்களின் முறையீடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்றுள்ளதாகவே நாம் அறிகின்றோம். நமது போராதரவு பெற்ற நகராட்சி தலைவர் திருமதி ஆபிதா அவர்களின் கூற்றுபடி இதுபற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் நமது மாவட்ட கலெக்டர், மற்றும் வட்டார வாகன அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே அவர்களின் இறுதி முடிவிற்காக நாம் பொறுத்திருக்போம்.

” யாஅல்லாஹ் எங்களின் ஊர் நலனுக்கு ஒருவழிபாதையில் எவ்வழி சிறந்தாக நீ நாடுகின்றாயே அவ்வழியையே நீ எங்களுக்குத் தந்தருள்வாயாக.”.

அன்புடன்
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு.
(கிழக்கு மாகாணம் சவுதி அரேபியா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதையை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும்! தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட...
posted by அமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு) [02 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15397

அன்பின் சகோதர்களே....

கே டி எம் தெரு சகோதரா்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இடைஞ்சல்களையும் கொஞசமும் குறைவில்லாமல் எங்கள் தெருவும் அனுபவித்து வருவது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

ஒரு வழிப்பாதை அவசியம் ..அது எங்கள் தெருவுக்கும் அந்த ஒரு வழிப்பாதை வேண்டும். சகோதரா்களே ....கடந்த வருடங்களில் சின்ன நெசவுத் தெருவில் ஏற்பட்ட விபத்துகளை தாங்களும் அறிவீா்கள். இனியும் விபத்துகள் நடக்கா வண்ணம் எங்கள் தெருவுக்கும் ஒருவழி பாதை வேண்டும். சகோதரா்களே! மாற்று வழியை காணுங்கள்..... தீர்வு பிறக்கும்.

ஒருவரையெருவா் சாடுவதையும் முகத்திரைகளை கிழிக்கவும் போராடும் சகோதரா்களே மாற்றவழி பற்றியும் சிந்தியுங்ககளேன்.

ஒருவழிப்பாதை வரும் என்ற நம்பிக்கையுடன்.
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக...
posted by அமீர் சுல்தான் (சின்ன நெசவுத் தெரு) [02 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15395

ஒரு வழிப்பாதை அவசியம்.....
எங்களது தெருவுக்கும் அந்த ஒருவழிப்பாதை அவசியம்.....

அன்பின் காயல் நகர மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒருவழிப்பாதை குறித்து தங்களின் ஆக்கப்புா்வமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இவ்வளவு நீண்ட விவாதத்திலும் சின்ன நெசவு தெரு என்று ஒன்று இருப்பதை அனைவருமே மறந்து விட்டீர்கள் போலும். தயவு செய்து, காயல் நகரில் ஒரு வழிப்பாதை அமல் செய்யப்பட்டால் எங்கள் தெருவும் ஒரு வழிப்பாதையாக உதவுமாறு அனைத்து சகோதரர்களையும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பல விபத்துகளை எங்கள் தெரு சந்தித்திருப்பது உங்களுக்கு தெரியும். குறைந்த பட்சம் ஒரு வழிப்பாதையாக இருந்தால் பஸ் எந்த பக்கமிருந்து வருகின்றது என்றாவது தெரியும்.. KTM தெரு சகோதரர்கள் சொல்வது உண்மைதான், எல்லா தெருவுக்காரர்களும் தங்கள் தெருவிலே விளையாடியது போன்ற சிறுபிள்ளை பருவத்து அனுபங்களும் எங்களுக்கு இல்லை. பெரிய நெசவுத் தெருவுக்கோ அல்லது அலியார் தெருவுக்குதான் சென்று விளையாட வேண்டும்,

ஏனோ தெரியவில்லை இதுவரை எங்களுடைய சிரமங்கள் யாராலுமே பேசப்படவில்லை. எங்களுடைய சிரமங்கள் சொல்லி மாளாது, தயவு செய்து ஒரு வழிப்பாதை நம்மூருக்கு வந்தால் தயவு செய்து எங்க தெருவையும் ஒருவழிப்பதையாகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,

அன்புடன்
அமீர் சுல்தான்
சின்ன நெசவுத் தெரு
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved