செய்தி: மே 21, 22, 23இல் மத்ரஸா ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விழா சிறக்க வாழத்துக்கள் posted byAminas (kayalpatnam)[19 May 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 4551
கலைக் கூடம் ஹாமிதிய்யாவின் மார்க்க விழாக்கள் நனி சிறக்க எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், துஆக்களும்.
அருள் மறையை அகத்திலேந்திய அருமந்த மாணவர்கள் வாழ்வில் அருளாளன் அல்லாஹ்வின் அன்பும் அருளும் பொழியட்டுமாக!
அஹ்மதர் நபிகளாரின் அளவற்ற அன்பும், ஆசியும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
முச்சுடர் முஹ்யித்தீனின் முத்தான துஆவும், ஆசியும் முழுதும் கிட்டுமாக!
அருமை ஹாஃபிழ்களின் அன்பு பெற்றோர்களுக்கு நாளை மறுமையில் பொற்கிரீடம் சூட்டப் பெறும் பொற்புயர்ந்த பாக்கியம் நிச்சயம் கிட்டட்டுமாக!
வல்லவன் ரஹ்மான் அங்கீகரிப்பானாக! ஆமீன்.
Congratulations posted byAminas (kayalpatnam)[07 May 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 4261
மாஷா அல்லாஹ். இளம் விஞ்ஞானி அரிய பல சாதனைகள் திறம் பட புரிந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். வல்ல ரஹ்மான் இவ்விள விஞ்ஞானியின் வாழ்வில் எல்லா வளத்தையும் நலத்தையும் ஈந்தருள்வானாக! ஆமீன்.
செய்தி: மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 6 மாணவியர் ஆலிமா பட்டமும், இருவர் முதர்ரிஸா பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Congratulations posted byAminas (kayalpatnam)[04 May 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 4232
ஆலிமா ஸனது பெற்ற அன்பு ஆலிமாக்களே! அருள்மறை வழி நின்று அண்ணல் நபி காட்டிய பாதையில் அழகுபட நடந்து ஈருலகிலும் ஜெயம் பெற வல்லோனை இறைஞ்சி பிரார்த்தித்து வளமான சுகமான வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
வல்லோன் ரஹ்மான் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் எல்லா வித பாக்கியங்களையும் ஈந்தருள்வானாக! இகமுடிவு நாள் வரை மத்ரஸாவாரஹ்மான் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் எல்லா வித பாக்கியங்களையும் ஈந்தருள்வானாக!
இகமுடிவு நாள் வரை மத்ரஸாவாம் மாதிஹுல் கௌது அரபிக் கல்லூரியை ஓங்கி வளர செய்வானாக! ஆமீன்.
Masha Allah posted byAminas (Kayalpatnam)[08 April 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 3837
மாஷா அல்லாஹ். இந்த சீரிய பணிக்கு உமது பொருட்களை தான தருமம் செய்வதற்காக இந்த வாய்ப்பினை அளித்த இறைவனுக்கு முதலில் நீங்கள் நன்றி செலுத்துங்கள். ஏனெனில் ஸதகத்துன் ஜாரிய்யா எனும் நீடூழி கால நன்மை இக்குழுவிலுள்ள அனைவருக்கும் கிட்டும் என்பது திண்ணம்.
வல்லவன் இறைவன் நமதூராம் காயல் மாநகர மக்களையும், மற்றைய உலக மக்களையும் கொடிய நோயாம் இந்த புற்றுநோயை விட்டும் காப்பாற்றி செழுமையான நிம்மதியான வாழ்வை ஈந்தருள்வானாக! ஆமீன்.
இத்திட்டத்தின் கீழ் உதவும் அனைத்து நாட்டு மக்களுக்கும் இறைவன் மென்மேலும் தொழில் துறைகளில் அபிவிருத்தி செய்து அவர்களது வாழ்வையும் சிறப்பாக்கி தருவானாக! ஆமீன்.
வாழ்த்துக்கள் posted byAminas (Kayalpatnam)[02 April 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 3731
பட்டம் பெற்ற அனைத்து மழலை செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பட்டம் உங்களது பள்ளி பருவம் முடிந்து கல்லூரி பருவத்திலும் தொடர்ந்து பெற்றிட வாழ்த்துகிறோம்.
கலைகள் பல கற்று பட்டங்கள் பல பெற்று பன்னெடுங் காலம் பல்லாண்டு வாழ்ந்து வளம் பெற வல்லோனை பிரார்த்திக்கிறோம்.
Masha Allah posted byAminas (Kayalpatnam)[01 April 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 3704
மாஷா அல்லாஹ். பார்ப்பதற்கே பரவசமாக இருக்கிறது. வல்ல ரஹ்மான் என்றும் ஒத்துழைப்பும் ஒற்றுமையுமாக வாழ அருள்பாலிபபானாக! அதன் பொருட்டு நமதூர் ஏழை எளிய குடும்பங்களின் கண்ணீர் துடைதது அவர்கள் வாழ்விலும் மறுமலர்ச்சியையும் ஏற்படுததுவானாக! ஆமீன். என்றும் துஆக்களுடனும், வாழ்த்துக்களுடனும்
Current posted byAminas (Kayalpatnam)[31 March 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 3687
இதுவாவது பரவாயில்லங்க. இந்த மாதம் 2 முதல் 4 வரை என்று அறிவித்திருந்தாங்க. அதுலாம் இப்ப இல்ல. இப்பமெல்லாம் எப்ப கரண்ட் எடுக்கிறாங்க. எப்ப விடுவாங்க என்று. 2 மணி நேரமா? 3 மணி நேரமா? என்று கூட தெரியாமா எந்த வேலையையும் ஒரு முடிவுக்கட்ட முடியாம முழிச்சிட்டு இருக்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross