செய்தி: பொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது! சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும்!! மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அதையும் செய்தியாக்கலாமே! posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[14 June 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 35288
மாஷா அல்லாஹ்,
அனுபவம் மிகுந்த அருமையான பேச்சு அஹமது சாஹிபு அவர்களுடையது. அனுபவம் மிக்கவர்களினால் தான் இத்தகைய பேச்சுக்கள் பேச முடியும்.
இதை போல சமுதாய பற்றுள்ள நல்ல ஒரு பேச்சும் மக்களவையில் ஒளிக்கபட்டுள்ளது அண்மையில், ஆம் அது தான் ஹைதராபாத் MP அசசுதீன் உவைசியின் அண்மைய பேச்சு.
மதிப்பிற்குரிய அஹமது சாஹிபின் பேச்சை போல இதுவும் முக்கியம் வாய்ந்தது என்பதால் அதையும் செய்தியாக்க அன்புடன் வேண்டுகிறேன்.
செய்தி: பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 491; தேர்ச்சி சதவீதம் 97.32! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[23 May 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 35077
அல் ஹம்து லில்லாஹ்,
தேர்ச்சி பெற்ற எல்லாவருக்கும் வாழ்த்துக்கள்.
இவர்கள் இனியும் நல்ல படியாக மேற்படிப்புகள் படிக்கவும், அவைகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெறவும், குடும்பத்துக்கும்,சமூகத்துக்கும் உதவி உள்ளவர்களாக ஆக்கி வைப்பானாக.
இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள ரிஷாதா என்ற மாணவி எனது தங்கை மகள் (மருமகள்) அவளுக்கு மாமாவின் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
இது தான் சரியான ஆயுதம். posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[31 March 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 34069
தேர்தல் புறக்கணிப்பு, இதுவே இந்த தருணத்தில் சரியான ஆயுதமாக இருக்கும். ஆனால் இந்த செயலுக்கு எல்லா ஜமாஅத்தார்களும் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்கணும். இன்ஷா அல்லாஹ் நம்மவர்கள் செய்வார்களா?
ஆனால் இது நல்ல சந்தர்ப்பம் தயவு செய்து நல்ல முடிவு எடுங்கள். அதிகமான வாசகர்கள் சொன்னது போல இந்த சந்தர்பம் கிடைக்க இனியும் ஐந்து வருடங்கள் காத்திருக்கணும்.
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: தலைநகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது! முதல் நாள் நிகழ்சிகளின் தொகுப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள் posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[19 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33812
எங்கு சென்றாலும் இஸ்லாமிக உடையை பின்பற்றும் நம் நகரமன்ற தலைவிக்கு பாராட்டுக்கள்.
பயணத்தில் அதிகமான அனுபவங்களை படித்து இன்னும் நம் நகருக்கு நல்ல பல திட்டங்கள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
Re:... posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[13 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 33160
நண்பர் ஜகாங்கீர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நகராட்சியின் கடந்த கூட்டத்தின் நிகழ்வுகளின் அசை பட பதிவுகள் இந்த இனைய தளம் மூலம் பார்க்க நேர்ந்தது. அல் ஹம்து லில்லாஹ். சப்தம் கிளியராக இல்லா விட்டாலும் உங்களின் பேச்சுக்கள் எல்லாம் சிறப்பாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக “இன்னும் சில காலமே பதவியில் இருப்போம் என்றும், அதற்குப் பிறகு அல்லாஹ்வுக்கு பதில் கூற வேண்டும்” மிகவும் பிடித்திருந்தது. இதற்கு மற்றவர்கள் சொன்ன பதில் அவர்களின் தரத்தை வெளி காட்டியது.
இப்படி உண்மை விஷயங்கள் வேலையில் வர இது போன்ற அசைபட மற்றும் பத்திரிக்கைகள் நகர் மற்ற செய்திகளை ரிப்போர்ட் செய்யவேண்டும். இந்த மாதிரியான செய்திகளை இதன் ஆரம்ப காலத்தில் நீங்கள் அறியாமையில் எதிர்த்து சற்று வேதனை தான். சரி அல் ஹம்து லில்லாஹ்.
இனியுள்ள காலங்கள் நல்ல படியாக இருக்கட்டும், அல்லாஹு நன்மையை நாடுவான்.
Re:... posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[10 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 33100
அஸ்ஸலாமு அலைக்கும்
shaha (dubai) கேள்வி நியாயமானதே, இது பற்றி தெரிந்தவர்கள் அல்லது நம் இணையதளத்தினர் விரிவான செய்தியை அளித்தால் நலம்.
குறிப்பாக இந்த ஆதார் இப்போது சமையல் வாயு மானியத்தில் கிடைக்க தான் முதலில் அமுல் படுத்துவார்கள். நான் வசிக்கும் கேரளத்தில் ஆதார் நம்பரை வங்கியில் கொடுத்து தங்களது கணக்கில் பதிவு செய்து பிறகு அதை கியாஸ் ஏஜன்சியில் அறிவித்தால் நமக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு கிடைக்கும் இல்லைன்னா கிடைக்காது என்றார்கள். இப்படி நாம் பதிவு செய்து விட்டால் கியாஸ் சந்தை விலையில் கேரளாவில் சுமார் 1300 ரூபாய் கொடுத்து வாங்கணும். (நம் வங்கி கணக்கில் மத்திய அரசு மானிய தொகையை போட்டு விடுமாம்)
இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி இணைத்து கொண்டவர்கள் பலருக்கு சரியாக மைய தொகை அவர்களின் வங்கி கணக்குக்கு வருவதில்லைன்னு எப்பவும் கியாஸ் ஏஜன்சியில் லடாய் தான். அவர்கள் கை மலர்த்தி விடுவார்கள்.
இப்படி இந்த திட்டம் இறுதி நாள், இறுதி நாள் என்று 3 தடவை மாற்றினார்கள். எல்லாரும் ஆதாரை இணைக்க வில்லை என்ற காரணம் சாட்டி. இறுதியாக மத்திய அரசே சமையல் எரிவாயு மானிய விலையில் கிடைக்க ஆதாரை இணைக்கணும் என்பதை ஒத்தி வைத்துள்ளது.
மற்ற படி முக்கியமா இல்லையா என்பதை நன்றாக தெரிந்தவர்கள் தான் சொல்லணும். சிலர நம் ரகசியங்கள் எல்லாம் எந்த பாது காப்பும் இல்லாமல் தனியார் கம்பனிகளுக்கு போகும் என்கிறார்கள். ஏனென்றால் இந்த ஆதாருக்கான வேலைகள் தகவல்கள் எல்லாம் சேகரிப்பது தனியார் தானாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross