Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:52:09 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13397
#KOTW13397
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 31, 2014
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4428 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் வடபுறத்தில் உள்ள DCW தொழிற்சாலை - 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - விரிவாக்கம் செய்திட திட்டமிட்டுள்ளது.

அதன்படி -

*** தற்போது உற்பத்தி செய்யப்படும் TRICHOLORO ETHYLENE (TCE) ஆண்டிற்கு 7200 டன் என்ற அளவில் இருந்து 15480 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்படும்.

*** POLY VINYL CHLORIDE (PVC) உற்பத்தி ஆண்டிற்கு 90,000 டன் என்ற அளவில் இருந்து 150,000 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்படும்.

*** புதிதாக CHLORINATED PVC (CPVC) உற்பத்தி 14,400 டன் அளவிற்கு தொடங்கப்படும்.

*** நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி - தற்போதைய 58.27 MW அளவில் இருந்து 108.27 MW அளவிற்கு உயர்த்தப்படும்.


கடந்த சில ஆண்டுகளாக மத்திய அமைச்சகம் முன்பு பரிசீலனையில் இருந்த இந்த விரிவாக்க திட்டத்தினை எதிர்த்து காயல்பட்டினத்தில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) போராட்டங்கள் நடத்தியது. அதனை தொடர்ந்து நிலுவையில் இருந்த இந்த திட்டம் குறித்த முடிவு, தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி - மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (MINISTRY OF ENVIRONMENT AND FORESTS), இந்த விரிவாக்க திட்டத்திற்கு ENVIRONMENTAL CLEARANCE (EC) என்ற சுற்றுச்சூழல் ஒப்புதலை - பிப்ரவரி 24 அன்று வழங்கியுள்ளது என தெரிகிறது. ஒப்புதல் கடிதம் - அமைச்சக இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.



இதன் தொடர்ச்சியாக - தமிழக அரசின், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலுக்கு இந்த திட்டம் தற்போது காத்திருப்பதாக தெரிகிறது.

DCW தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஒப்புதல் நகல்














Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற முடியுமா?
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [31 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34055

இந்த ஒப்புதலுக்கு, KEPA மூலமாக நீதிமன்றத்தில் தடை ஆணை பெற வாய்ப்புள்ளதா? என்று வக்கீல்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கலாமே.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாசுகட்டுப்பாடு
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [31 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34056

அன்பு காயல்வாசிஹலே சிந்தியுங்கள்.

அனுமதித்துள்ள தயாரிப்புகள் ஆரம்பித்தால் இந்த area, மிஹவும் பாதிக்கும். அதுவும் பவர் பிளான்ட் கரி(COAL,)ஐக்கொண்டு தயாரிப்பதால் SO2, (கஅந்தக டை ஆக்சைடு காஸ் ) மற்றும் CO, (கார்பன் மோனோ ஆக்சைடு காஸ் ) அதிக அளவு காற்றில் வந்து பல நோய்களை உருவாக்கும். alllah காப்பாதுவானஹா.

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [31 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34057

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த நேரத்தில் அணைத்து கட்சி மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைத்து மேலும் நகராட்சி இதனை கண்டித்து தீர்மானம் போட்டு அரசுக்கும் தேவையான துறைகளுக்கும் அனுப்ப வேண்டும்.

தேர்தல் நடப்பதால் இந்த தருணத்தில் அணைத்து கட்சிகளும் நமக்கு ஆதரவாக செயல்படுவார்கள் இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தனும்.

நம் நாட்டை பொருத்தவரை சுற்றுப்புற சூழல் துறை , மதிய சுற்றுப்புற துறை , வனத்துறை , நீதி மன்றங்கள் , பசுமை தீர்ப்பாயம் போன்ற பொதுவான அமைபுகள் போன்றவற்றின் மீது மக்களுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிகையும் அழிந்து வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [31 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34059

நம்மவர்கள் என்ன எதிர்த்தாலும் நீ செய்வதை செய் நான் செய்வதை செய்கிறேன் என தொழிற்சாலை நிர்வாகமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் நமக்கு எதிராக செயல் பட்டுள்ளது.

இது நல்ல தருணம் நாம் அனைவரும் ஒன்று பட்டு (நடக்குமா? ) இதை தடுத்து நிறுத்தாவிட்டால் வருகிற தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம் என ஒன்று பட்டு செயல் படவேண்டும். நடக்குமா இந்த ஒற்றுமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அழிவு சக்திகள்
posted by Mauroof (Dubai) [31 March 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34062

அழிவுக்கான வெள்ளோட்டமா? என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்பு பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில், "ஆட்சியைவிட்டுப் போகும்போது போகிறபோக்கில் கண்ணி வெடிகளை விதைத்துவிட்டுப் போகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு" என்று ஒரு வாக்கியம் இடம் பெற்றது. அதுதான் இங்கும் நியாபகம் வருகிறது.

இந்த ஒப்புதலை தற்போது வழங்காது போனால் கணிசமான தொகை கிடைக்காமல் போய்விடும். ஒருவேளை பாஜக தலைமையில் மத்திய அரசு அமைந்தாலும் இந்த ஒப்புதல் நிச்சயம் வழங்கப்படும். காரணம், "வளர்ச்சி" என்ற ஒன்றிற்காக எதையும் அழிக்க/இழக்க அவர்கள் தயார். இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் நீதித்துறையின் கதவுகளைத் தட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் உதவி, பெரும் நாசம் விளைவிப்பவர்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு இருக்கட்டும் என பிரார்த்திப்போம். சிந்திப்பதோடு நின்றுவிடாமல் செயலில் காட்டிட துணை நிற்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஒற்றுமையா,,,?அப்படின்னா ,,அனாக்குஎத்தனை,,?
posted by OMER ANAS (DOHA QATAR.) [31 March 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34063

பார்த்தீர்களா,, மக்களே ...! நாம எல்லோரும்,அரசியல் கட்ச்சிகளுக்காக, கால் மாறி,தலை மாறி புண்ணாக்கு வித்துக் கொண்டு இருக்க,சைக்கிள் கேப்புலே இவன் நமக்கே சுண்ணாம்பு வித்து போட்டான்! ஆக காங்கிரசான் எட்டப்பன் வேலையை மீண்டும் தொடங்கி விட்டான்.!

செத்த நரி முகத்தில் கூட முழிக்க இவனை நாம் இனி விடக்கூடாது.அப்படின்னா நாம் ஒன்று படுவோம்.ஒற்றுமையா இருப்போம்!!!

எந்த கட்சிக்குவேண்டி ???????????எந்த மக்களுக்குவேண்டி ??? ஆமா ,,,,ஒற்றுமை,, அப்படின்னா,,அனா பைசாக்கு எத்தனை?????

எல்லாம் தேர்தல் நடந்து முடிந்த பின், ஒக்காந்து யோசிப்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஒரே தேர்வு வருகின்ற தேர்தலை புறக்களிப்பதை தவிர வேறு வழியில்லை..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [31 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34064

தேர்தலை புறக்களிப்போம் என்று அன்று முழங்கினோம்.. இன்று தேர்தல் நெருங்கி விட்டது - நாம் எதிர்த்த அமிலமும் நாளுக்கு நாள் இந்த நாசக்கார ஆலை மூலம் மேலும் இராசயன கழிவை பெருக்குகிறது.. இதற்க்கு இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்...

அணைத்து ஜமாஅதுக்களும் கூடி ஒரு முடிவு எடுத்து நகரின் ஒட்டுமொத்த வாக்குகளை புறக்களிப்போமா..! நகரின் மீது அக்கறை பற்று பாசமுள்ள அந்த அந்த அமைப்பு - சங்கங்கள் - ஜமாஅதுக்களின் பெரியவர்கள் அணைத்து கட்சி பிரதிநிதிகளை அழைத்து பேசி ஊரே ஓன்று கூடி இது விசியத்தில் ஒரு முடிவை எடுக்க தயாராகும் நேரமிது..! இனி இப்படி ஒரு நேரம் அமைய அடுத்த 5 ஆண்டுகாலம் ஆகும்..

வாக்களிக்கும் காலம் சில நாட்களே உள்ளன ஆகையால் காலம் தாழ்த்தாமல் நேரம் தாழ்த்தாமல் இதில் களம் இறங்க வேண்டும்.. மக்கள் உயிருடன் விளையாடும் இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக தேர்தல் புறக்களிப்பு இந்நேரத்தில் அவசியபடுகிறது.

நகர் மக்கள் விழிப்புணர்வு இல்லாதவரை இன்னும் பல திட்டங்களை இந்த நாசக்கார ஆலை மக்கள் விரும்பாத உற்பத்தியை தொடங்கத்தான் செய்யும்..!

எந்த அரசியல்வாதியும் நம் நகரின் நம் மக்களின் நன்மையை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.. நாமே நம் மக்களின் ஆரோக்கியத்தை செவிமெடுக்க வேண்டும்..

இந்த ஆலைக்கு எதிராக அதன் மூலம் இந்த நகரமக்களின் கவனத்தை அறிய தேர்தல் ஆணையத்தின் பார்வையும் கவனமும் நம் நகரை பார்த்து திரும்பும் முகமாக காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு KEPA எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் தயார்..! இது போன்று நகரில் அணைத்து மக்களும் தயாரக வேண்டும்..

நம்மிடையே கட்சி வேறு..! கொள்கை வேறு..! ஆனால் இந்த நாசக்கார ஆலையின் மூலம் பரவும் நோயும், சீரழிவும், (கேன்சர்) மரண வேதனையும் நம் அனைவருக்கும் ஒண்ணுதான்..! இதை மனதில் வைப்போம் அடுத்த தலைமுறைகளை நோயில்லாமல் பாதுகாப்போம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [31 March 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34065

கட்சியாவது கத்திரிகாயவது. நல்ல சந்தர்ப்பம். மத்தியில் இன்னமும் காங்கிரஸ் தான் ஆண்டு கொண்டு இருக்கிறது . சுற்று சூழல் அமைச்சகம் நினைத்தால் நிறுத்தி விடலாம் .

சமூக நல அமைப்புகள், நமதூர் ஐக்கிய பேரவை ஒன்றிணைந்து தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தால், DCW நிறுவனத்திடம் தேர்தல் நிதி வாங்கிய கட்சிகள், வாங்காத கட்சி, DCW நிறுவனத்தை எதிர்த்து போராடும் கட்சிகள் அனைத்தும் வருவார்கள்.

தேர்தல் முடியட்டும், விண்ணை வில்லாக வளைப்போம், கையிறை மணலாக திரிப்போம் என்று பசப்பு வார்த்தை கூறுவார்கள். தேர்தல் முடிந்த உடன் என்னை பாரு என் கண்ணை பாரு என்று சென்று விடுவார்கள். நல்ல சந்தர்பம். இதை விட்டால் இனி ஐந்து வருடம் கழித்து தான் பார்க்க வேண்டும். தயவு செய்து ஊரை காப்பற்றுங்கள் காயல் அரசியல் நண்பர்களே.வருங்கால சந்ததியினரை காப்பாற்றுங்கள்.

எல்லா நண்பர்களும் இவ்விசயத்தில் தங்கள் கருத்துகளை வெப் சைட் மூலம் குரல் எழுப்புங்கள்.அல்லாஹ் வெற்றி தருவான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...தேர்தலை புறக்கணிப்போம்!
posted by M.A.K. JAINUL ABDEEN (kayalpatnam) [31 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34066

நாசகார ஆலையால் நித்தம் மரணித்துக் கொண்டிருக்கும் மனித உயிருக்கு எந்த ஒரு விலையுமில்லாமல், இந்த ஆலையால் மனித உயிருக்கு மாபெரும் ஆபத்து என்று ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், நம் மக்களின் நீண்ட போராட்டங்களுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லாமல், அந்த நாசகார ஆலைக்கு புதிய யூனிட் துவங்க மத்திய அரசின் அனுமதியா? பொங்கி எழுங்கள் சகோதரர்களே!

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆலையின் அடாவடித்தனத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழ்நிலை.

இந்த ஆலையின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர நம் மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும். இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி, அரசியல், கொள்கை பார்க்காமல் நாம் ஒன்றினைந்து செயல்பட்டு, நாசகார ஆலையை கூண்டோடு அகற்ற முயற்சி செய்வோம். அல்லாஹ் நமதூரை இயற்கை சீற்றங்களிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் பாதுகாப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) [31 March 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34067

ஹாஜி ராவன்னா அபுல் ஹசன் அவர்களின் ஆதங்கம் தெளிவாக விளங்குகிறது. அவர்களே முன் நின்று நமதூர் அரசியல் கட்சி, KEPA ,சமூக அமைப்புகள், அணைத்து ஜமா த்துகளை அழைத்து நமதூர் ஐக்கிய பேரவை மூலம் ஒன்றினைத்து அவசர கூட்டம் கூட்டி தேர்தல் முடிவுக்கு வந்தால் தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இவ்வளவுக்கு அப்புறமும்...???
posted by Dawood bin Shaffie (Hong Kong) [31 March 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 34068

அன்பு சகோதரர்களே..

எவ்வளவு போரட்டம்....?
எவ்வளவு தெளிவுரைகள் சமர்பிப்பு... ?
எவ்வளவு முயற்ச்சிகள்...???

இவ்வளவுக்கு அப்புறமும்... இந்த படுபாவிகள்... பிச்சைக்கார நா____கள்... இப்படி approval கொடுத்திருக்கிரானுங்களே..??? இந்த மொள்ளமாரிகளுக்கு ஓட்டு போடனுமா மறுபடியும்???

ஒன்னு... இந்த தேர்தலை முற்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு / அனைத்து பத்திரிக்கைகளுக்கு அறிவித்து... புறக்கணிக்கனும்...

அப்படி இல்லைன்னா... அன்னைக்கி நம்ம ஊருக்கு முன்னறிவிப்பு இல்லாம வந்து... ஓட்டு கேட்டுட்டு போன காங்கிரஸ் வேட்பாளருக்கு இதை தெரிவித்து... அந்த Approvalஐ உடனடியா cancel பண்ண வைக்கணும்...

அதுவும் இல்லைன்னா நாம அத்தனை பேரும் சேர்ந்து..... தூத்துக்குடி தொகுதி பூராவும் களப்பணி ஆற்றி மாற்று வேட்ப்பாளரை வெற்றி பெற செய்யணும்...

அதுவும் possibility இல்லைன்னா அந்த approval orderஐ எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் Stay வாங்கனும்...

Railwayஐ எதிர்த்து ஒன்றுபட்டது போல... முஸ்லீம் லீக், தி மு க உட்பட அத்துணை கட்சிகளுடனும் பேசி நம் சுற்றுப்புற ஊர்கள் அனைத்தையும் ஒன்றுபட முயலுங்கள் (தேர்தலை புறக்கணிக்கவோ(???) (அ) மாற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்கவோ (???)) ... இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்....

நம் அனைவரையும் இன்னும் நம் சந்ததிகளையும் கொடிய நோய்களை விட்டும்... பேராபத்துகளை விட்டும் அன்பாளன் அல்லாஹ் காத்து அருள் பாலிப்பானாக... ஆமீன்.

தாவூது (பின்) ஷாஃபிஈ...
ஹாங்காங்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இது தான் சரியான ஆயுதம்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [31 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34069

தேர்தல் புறக்கணிப்பு, இதுவே இந்த தருணத்தில் சரியான ஆயுதமாக இருக்கும். ஆனால் இந்த செயலுக்கு எல்லா ஜமாஅத்தார்களும் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்கணும். இன்ஷா அல்லாஹ் நம்மவர்கள் செய்வார்களா?

ஆனால் இது நல்ல சந்தர்ப்பம் தயவு செய்து நல்ல முடிவு எடுங்கள். அதிகமான வாசகர்கள் சொன்னது போல இந்த சந்தர்பம் கிடைக்க இனியும் ஐந்து வருடங்கள் காத்திருக்கணும்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ஒற்றுமையே பலம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [31 March 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34070

அன்புடையோர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்..

KEPA வின் கீழ் எல்லோரும் ஓன்று கூடுங்களேன் ??? காயலில் உள்ள எல்லா வாக்காளர்களும் நோட்டா விற்கு தான் எங்க ஒட்டு என்று தீர்மானமாக சொல்ல முடியுமா ?

சொல்லுங்களேன் இன்னிக்கே ! அப்போதான் அரசாங்கத்தின் கவனம் நம் பக்கம் திரும்பும், நமது குறைகள் கேட்கப்படும், மக்கள் சக்தி முன்னால் எந்த சக்தியும் ஜெயித்தாதாக சரித்திரம் இல்லை, வாருங்கள் சரித்திரம் படைப்போம்.

KEPA நிர்வாக குழு உறுப்பினர்களே, தயவு செய்து நீங்கள் தான் முன்னின்று இந்த ஆலோசனையை நிகழ்வாக ஆக்கிக் காட்ட வேண்டும்.

செய்வீர்களா ????? செய்வீர்களா ??????

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வழக்கு போடுவதே தீர்வு.
posted by syed ahamed (KAYALPATNAM ) [31 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34071

நகரின் மாசுக்கு எதிராக போராடும் KEPA வின் அறிவிப்பு எதுவாக இருந்தாலும் நாம் கட்டுபடுவோமாக. நம்மால் இயன்ற பொருளாதரத்தையும் அளிப்போமாக.

நடக்கவிருக்கும் தேர்தலின் ஓட்டுக்களை புறக்களிப்போமாக. தொழிற்சாலை மீது நகர் மக்கள் சார்பாக பொது வழக்கு பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும். ஊரின் அனைவர்களும் கைகோர்ப்பமாக. இதுவே தீர்வு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஐக்கிய பேரவை எங்கிருந்தாலும் ஓடோடி வரவும்!.அரண்டவன் குவும் குரல்!!!.
posted by s.s.md meerasahib (TVM) [01 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34073

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் வாசிகளே........ நம் ஊரில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியவில்லை என்றாலும்....... சந்தர்ப்பத்திர்க்காவது ஒன்று பட்டே...... ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் ஐக்கிய பேரவை. அதன் அமைப்பால் பல நேர் முக வெற்றியும், பல மறை முக வெற்றியும் கண்டு இருக்கிறது நம் காயல்.

ஆனால்....... ஊர் (ஒற்றுமையை கடைபிடிக்கும்) மக்கள் சோறு சாப்பிட்டால்....... ஒற்றுமையை சீர் குழைக்கு ஓர் இனம் நாங்கள் சோறு சாப்பிடமாட்டோம் வேறதான் சாப்பிடுவோம். என்று சொல்லி ஐக்கிய பேரவை முகத்தில் கரிவாரி பூசியது. அறியாத்த பிள்ளைகளுக்கு சொறியும்போது தெரியும் என்பார்கள்.அதன் வேதனை. இப்போது பிள்ளைகள் சொரிய ஆரம்பிச்சி இருப்பதால் ஐக்கிய பேரவை இந்த விசயம்களில் தலையிடாமல் மௌனம் காப்பதே...... நன்று.

ஒற்றுமை..... ஒற்றுமை...... என்று ஊர் உரக்க கத்தும் நேரத்தில் இந்த இனம்கள்..... ஊருக்கு எதிராக செயல் பட்டு "உணர்வு" பத்திரத்துக்கு உணர்ச்சி அற்று ஆதரவு கொடுத்து சொந்த மண்ணில் அனாதைகள் ஆகி இருக்கிறார்கள். ஆகையால் ஐக்கிய பேரவை தலையிடாமல் உங்களுக்கு கட்டுப்படும் மக்களோடு........ உங்களின் உண்மை என்னம்களை புரிந்து கொள்ளும் ஜமாத்தோடு செயல் படவும்.

ஹைரிகி வ சர்ரிகி மினல்லாஹி தாஆலா...... இது நம் ஈமான்.

அட்மின் அவர்களே........ வழமை போல வாக்குவாதம், வழக்குவாதம் என்று மறுப்பது நல்லதல்ல. நம் மக்கள் ஒற்றுமையை விரும்புவர்களாக இருந்தால்....... சில கொள்கைகளை, வறட்டு குனம்களை, பணக்காரர்கள், அந்த குடும்பம்.... இந்த குடும்பம் என்ற போர்வையில் வரும் சைத்தானின் என்னம்களை கலைந்தால் ஒற்றுமை நிச்சயம்.

இந்த ஒற்றுமையை மட்டும் நிலை நிறுத்தியே...... இந்த என் பதிப்பு. வாக்கு வாதத்துக்கோ..... வழக்கு வாதத்துக்கோ...... அல்ல. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by farook (ksa) [01 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34075

நல்ல தருணத்தை நழுவ விடாம தேர்தல் புறகணிப்பு ஒற்றுமையா செய்தால் கொலையாளியை வெரட்டி அடிக்கலாம் . இந்த ஒப்புதலை ரத்து பண்ணி, மேலும்மேலும் சுற்றுபுறத்தை பாதுகாக்கனும்.

இந்த சர்ந்தற்பத்தை தவறவிட்டால் , இனி 1 - 2 வருடம் கழித்து எதோ ஒன்னுக்கு போராட்டம் அது இது என்று யாரவது வந்தால் எவனும் மதிக்க மாட்டான் .

சுற்றுபுறத்தை நாசமாக்கமாட்டோம் என்று DCW விடம் கோர்ட் மூலம் உறுதி வாங்கி தேர்தலில் பண்கேக்கலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. 'நோட்டா' சரிபடாது. புறக்கணிப்பு நல்ல முடிவை தரும்
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [01 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34076

சலீம் காக்கா, 'நோட்டா' ஓட்டு போட்டால், அது ஓட்டு போட்ட மாதிரிதான். அதனால் பலன் இல்லை. தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்து, KEPA, அனைத்து ஜமாதார்களையும் கலந்தாலோசித்து ஒரு அறிவிப்பு கொடுங்கள். அனைத்து அரசியல் நா--களும், அரசு அதிகாரிகளும் நம்மை தேடி வருவார்கள்.

அந்த நேரத்தில் தெரியும், எந்த அரசியல் கட்சி, இந்த ஆலை நிர்வாகத்திடம் மாதாந்திர 'கைக்கூலி' வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று. இவர்களை அடையாளம் காண, தேர்தல் புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

நாம் இப்படி ஏசி அறைகளிலும், வீட்டிலிருந்தும் இணையதளத்தை பயன்படுத்தி கமெண்ட்ஸ் அடித்தால், பொதுமக்களுக்கு அதிகம் தெரியப் போவதில்லை. இப்படி நமக்கு எதிராக, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது என்று அனைத்து ஜும்மாவில் வரும் வாரம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

விலாவாரியாக இல்லாமல், மக்களுக்கு புரியும்படி நோட்டிஸ் கொடுத்தால், மக்களும் தெளிவடைவார்கள். இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. அதற்குள் 'மஷூரா' செய்து வெள்ளிக்கிழமை அறிவிக்கலாம். இன்ஷா அல்லாஹ் இதற்கு நல்ல முடிவு கிடைக்கும். இந்த விஷயத்திலாவது "ஒற்றுமை எனும் கயிற்றை" பின்பற்றுவோம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [01 April 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34077

தம்பி அப்துர்ரஜாக் நோட்டா விற்கு பட்டனை அழுத்துவது ஓட்டு போட்டமாதிரி தான் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அது வேட்பாளரை அங்கீகரிக்காமல் எந்த வேட்பாளரையும் ஆதரீக்காத தாகவே அர்த்தம். நமது நோக்கம் ஒட்டு மொத்த எலெக்சனை புறக்கணிப்பது.

இதை இப்போதே தொடங்க வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

ஊரின் நுழைவாயில்களில் சின்ன சின்ன கிராமங்களில் செய்வதுபோல் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை இப்போதே துவங்க வேண்டும். அதிகாரிகள் நம்மை தேடி வருவார்கள். இல்லையெனில் நாம் அவர்களை தேடி அலையை வேண்டும். இந்த சந்தர்பத்தை நழுவ விட்டால் நமக்கும் கேடு, நமது சந்ததியினருக்கும் கேடு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34081

ஔவையார் பாட்டி கூறுவார்..

" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது..".

ஆனால் இந்த DCW வின் சுயநலத்தால், நம் சமுதாயமும், வரக்கூடிய நம் சந்ததியரும் அவ்வை ( ஔவை) பாட்டி கூறிய அரிதானது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.

* கான்சர் நோயினால் அவதிப் படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* துளிர் பள்ளிக்கூடம் ஆரம்பித்த சமயம் எத்தனை பிஞ்சுகள் இருந்தன, இன்று எத்தனை சிறப்பு பிஞ்சுகள் இருக்கின்றன என்று கணக்கு பாருங்க.

பலர் தங்களின் சிறப்பு குழந்தைகளை வீட்டிலே வைத்து இருக்கின்றார்கள். இதன் கணக்கு தனி.

ஆக, நம் வாழ்வு முழுவதும் பயத்துடனும், போராட்டத்துடனும் தான் வாழனுமா..!!

இதற்கு தீர்வாக பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

ஆனால், மக்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை. அம்மாவா, ஐயாவா, துடைப்பமா, புறக்கணிப்பா.. ஒன்றும் புரியவில்லை.

ஆக மொத்தம், நம் மக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போல, ஒட்டு மொத்த குழப்பத்தில் இருக்கின்றார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. வேண்டாம் விதண்டா வாதம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 April 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34091

தம்பி மீராசாஹிப் ஒற்றுமைக்கு குரல் கொடுப்பது போல் தனது பழைய காழ்ப்புணர்ச்சியையும் உமிழ்ந்து இருக்கிறார். தயவுசெய்து ஒற்றுமைக்கு மட்டுமே குரல் கொடுங்கள் வேண்டாம் மீண்டும் இந்த தளத்தை விவாத மேடையாக ஆக்க முயற்சிக்காதீர்கள். நடந்தவை எல்லாமே நன்மையாகத்தான் நடந்தது. அதனால் ஒற்றுமைக்கு பெரியவர்கள் இருந்தால் தான் ஆச்சு என்று போர்க்கொடி பிடிக்காதீர்கள்.

நாட்டாமை பஞ்சாயத்து காலங்கள் எல்லாம் மலை ஏறி விட்டது. ஒவ்வொருவருக்குள்ளும் தூங்கிக் கொண்டிருக்கும் "உணர்வை" தட்டி எழுப்பினாலே போதும், நாம் நமது இலக்கை எட்டிப்பிடிக்கலாம்.

இந்த விஷயத்தை பொறுத்த வரை சுற்றுப்புற சூழல் இயக்கமான KEPA தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் இதுவரைக்கும் தங்களது செயற்குழுவை கூட்டாததே பெரிய ஆச்சர்யமாக உள்ளது. KEPA வில் அங்கம் வகிப்பது எல்லோருமே ஊர் பெரியவர்கள் தான் எனபது தம்பிக்கு தெரியுமோ இல்லையோ ?

காயல்பட்டினம் இப்போது ஒரு குழப்பமான நிலையில் - எனபது தான் நிதர்சனம். தீர்வு : KEPA வே நீங்கள் தான் சொல்லவேண்டும் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [02 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34100

வீண் வாதம் வேண்டாம். நான் பெரியவனா நீ பெரியவனா என்று ஈகோ பார்க்க இதுவல்ல நேரம்.இது வரை நமதூர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஏன் வாய் திறக்க வில்லை ? நல்ல முடிவு எடுங்கள் கட்டுபடுகிரோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by A.Lukman (Thiruvallore) [03 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34110

அஸ்ஸலாமு அழைக்கும்

ஊரின் ஒற்றுமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு . எவ்வளவோ போராட்டங்களும் முயற்சிகளும் செய்தும் அரசுகள் மக்கள் பக்கம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இன்ஷா அல்லா . தேர்தல் புறக்கநிப்பவது அரசுகளின் கவனத்தை ஈர்க்கு மா என்று முயற்சித்து பார்க்கலாமே.

லுக்மான்
Thiruvallor


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...DCW
posted by Meera Sahib (Kayalpatnam) [17 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34420

கொடிய விஷத்தன்மை உடைய VCM 90000லிருந்து 150000மாக அதிகரிக்கும் நடவடிக்கை கயல்பட்டினதையே வேரோடு அளிக்கும் நடவடிக்கையாகும். இதை அனுமதித்தால் நம் சந்ததிகள் பாதிக்கப்படும். இது தேர்தல் நேரம். நம்மிடம் உள்ள ஆயுதமான வாக்குகளை பயன்படுத்தி முதாலிகளின் கைகூலிகளான அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டுங்கள்.

மக்களுக்காக மக்கள் பிரச்சினைகளை நன்கு உணர்ந்து செயல்படக் கூடியவர்களை தேர்ந்தெடுங்கள் . DCW கெஸ்ட் ஹவ்ஸில் ஜாலியாக ஓய்வெடுப்பவர்களை புறக்கணியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பீச் பாரடைஸ்! (?!)  (31/3/2014) [Views - 3803; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved