மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றமைக்காக, தமது அணியினருக்கு - ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் விருந்துபசரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்க கால்பந்து மற்றும் கிரிக்கெட் அணியினர் இவ்வருடம் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றமைக்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் திங்கள் இரவு ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் இரண்டு அணி வீரர்கள் உட்பட அனைத்து அங்கத்தினர்களுக்கும் இரவு உணவு விருந்து வழங்கப்பட்டது.
கடந்த 23ஆம் தேதி ஆதித்தனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சூப்பர் நாக்கவுட் போட்டியில் தூத்துக்குடி வில்சன் கால்பந்து கழக அணியினருடன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
அதுபோன்று கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி - பேர்ல் சிட்டி அணியினரை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் USC அணியினர் வெற்றிபெற்றனர்.
இத்தருணத்தில் அனைத்து வீரர்கள் மற்றும் USC-யின் அங்கத்தினர்களுக்கு விருந்து அளித்து கௌரவிக்கப்பட்டது.
கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தமைக்காக USC வீரர் வாஸிஃபிற்கும், கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் அடித்தமைக்காக USC வீரர் கோமான் யாஸருக்கும், பூட் மற்றும் ஷூ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருந்துபசரிப்பில் சுமார் 200-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |