காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 23ஆவது ஆண்டு விழா, இம்மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமை மாலையில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில், அதன் நிறுவனரும் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. வாவு எஸ்.அப்துல் கஃப்பார், செய்யித் முஹம்மத் அலீ, வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி ஆசிரியை எஸ்.செல்வ நங்கை வரவேற்றுப் பேச, ஃபாத்திமா ஃபர்ஸானா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
டாக்டர் கே.எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியர் செண்பகவல்லி ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.
கடந்த கல்வியாண்டில், இப்பள்ளியில் பயின்று - 10ஆம், 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கும், 100 சதவிகித வெற்றிக்குக் காரணமாக இருந்த ஆசிரியையருக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் மழலை மாணவ-மாணவியரது கலை நிகழ்ச்சிகள் - பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.
பள்ளி ஆசிரியை ஜெயமாலா நன்றி கூற, துஆ - நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியையர், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்துகொண்டனர். |