ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பிற்கு, அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.கே.செய்யித் அபூதாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது ஜக்வா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் 23.03.2014 மன்றத்தின் தலைவர் ஹாஜி M.A.S. செய்யது அபுதாஹிர் (அபு) அவர்கள் தலைமையில் கரூர் டிரேடர்ஸ் இல்லத்தில் நடைபெற்றது.
எமது மன்றத்தின் மூத்த உறுப்பினர் அல்ஹாஜ் S.L. புஹாரி மெளலானா, தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) தலைவரும் வணிக பெருந்தகையுமான அல்ஹாஜ் வாவு ஷம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M. ஷெய்கு அலி நுஸ்கி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். செயலாளர் அவர்கள் வந்தோரை வரவேற்றார். தலைவர் அவர்களின் தலைமையுரைக்குப்பின் செயலாளர் அவர்கள் ஆண்டறிக்கையும் சமர்ப்பித்தார்.
நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, பின்வருமாறு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 01.04.2014 முதல் 31.03.2015 வரை இன்ஷாஅல்லாஹ்.
தலைவர்:
அல்ஹாஜ் எம்.ஏ.எஸ்.அபூதாஹிர் (அபு)
துணைத் தலைவர்கள்:
1. அல்ஹாஜ் எஸ்.ஐ.அஹ்மது முஹைதீன்
2. அல்ஹாஜ் எஸ்.எம்.செய்யது அபுதாஹிர்
செயலாளர்:
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.ஏ.செய்யது முஹம்மது
துணைச் செயலாளர்கள்:
1. அல்ஹாஜ் பி.எம்.லுக்மான் மெளலானா
2. அல்ஹாஜ் பி.எம்.கே.ரிஃபாயி
பொருளாளர்:
ஜனாப் ஒய்.எச்.எம்.ஷாஹுல் ஹமீத்
துணைப் பொருளாளர்:
ஜனாப் ஓ.எல்.ஷெய்கு அப்துல் காதர்
ஓருங்கினைப்பாளர்கள்:
1. அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.எம்.ஷெய்கு அலி நுஸ்கி
2. ஜனாப். எம்.ஏ.கே.செய்யது அபு தாஹிர்
செயற்குழு உறுப்பினர்கள்:
1. அல்ஹாஜ் எம்.எம்.எல்.சீத்தீக்
2. ஜனாப் ஏ.எம்.அப்துர்ரஹ்மான்
3. ஜனாப் கே.ஷாஹுல் ஹமீது
4. அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் ஹசன் நுஸ்கி ஆலிம்
5. ஜனாப் எம்.ஐ.கலீலுர்ரஹ்மான்
6. ஜனாப் எம்.டி.அபுல் காஸிம் ஆலிம்
7. ஜனாப் எம்.டி.ஜபரூத் மெளலானா
8. அல்ஹாஜ் எம்.ஐ.செய்யது அஹ்மது சாலிஹ்
9.அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ஏ.இம்தாதுல்லாஹ்
மனு பரிசீலனைக் குழு;
1. அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஆலிம்
2. அல்ஹாஜ் எஸ்.எம்.காதர்
3. அல்ஹாஜ் எம்.எல்.சதக்கத்துல்லாஹ்
எமது சிறப்பு அழைப்பாளரும் தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) தலைவரும் வணிக பெருந்தகையுமான அல்ஹாஜ் வாவு ஷம்சுதீன் அவர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், தொழில் ரீதீயாகவும் சிறந்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
உறுப்பின்ரகளின் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானங்கள்:
1. தற்சமயம் கையிருப்பில் இருக்கும் ஜகாத் நிதியை மருத்துவம் மற்றும் கல்வி உதவி கோரி வரும் நமது ஊர் மக்களுக்கு வழங்குவது.
2. இக்ரா கல்வி சங்கம் மூலம் ஒரு மாணவனுக்கு வழங்கி வரும் கல்வி உதவி தொகை 2014-15 ஆண்டிற்கான ரூபாய் 5000/= வழங்குவதற்கு இக்கூட்டம் ஓப்புதல் அளிக்கிறது.
3. தமிழக அரசின் சார்பில் நடைபெறவுள்ள கிராம முனிசிபல் (V.A.O) தேர்வு சமபந்மாக மாணவர்களின் மத்தியில் இக்ரா மற்றும் ஊரில் இருக்கும் கல்வியாளர்கள் மூலம் விழிப்புனர்வு ஏற்படுத்துவது எனவும், தேர்வு எழுத முன் வரும் தேவையுடைய பத்து நபர்களுக்கு உதவி செய்வது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
4. இன்ஷாஅல்லாஹ் வரும் 06.04.2014 அன்று து.தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.செய்யது அபுதாஹிர் அவர்கள் ஓருங்கினைப்பில் சிற்றுலா செல்வது எனவு முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் அல்ஹாஜ் பி.எம்.கே.ரிஃபாயி அவர்கள் நன்றி நவில, மஷிஷ் ஆலிம் அவர்களின் துஆ ஸலாவத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |