ஜமாஅத்துல் ஆஹிர் (1435) மாத அமாவாசை மார்ச் 30 ஞாயிற்றுகிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மாலை 6:44 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் மார்ச் 31 அதிகாலை 12:14 மணி.
மார்ச் 30 அன்று காயல்பட்டினத்தில் சூரியன் மறைந்த பிறகு அமாவாசை நிகழ்கிறது. மேலும் - உலகில் வேறெங்கும் பிறையை காண
இயலாது.
மார்ச் 31 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:27 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:03. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 19 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 36 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் - வானிலை சூழல் தெளிவாக
இருந்தால் - பிறையை வெறுங்கண்ணால் காணலாம்.
மார்ச் 31 அன்று வட அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளில், வட மேற்கு ஆப்ரிக்கா நாடுகளில், மேற்கு ஐரோப்பா நாடுகளில் எளிதாக
பிறையை வெறுங்கண்கொண்டு காணலாம். அன்று வானிலை சூழல் தெளிவாக இருந்தால் - தென் அமெரிக்காவின் மத்திய நாடுகளிலும்,
ஆப்ரிக்காவின் மத்திய நாடுகளிலும், மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா நாடுகளிலும், மேற்கு சீனாவிலும் வெறுங்கண்கொண்டு பிறையை
காணலாம்.
தென் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளிலும், ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிகளிலும், கிழக்கு ஆசியா, கிழக்கு சீனா, ஜப்பான் ஆகிய பகுதிகளில்
தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிகளில் பிறையை காண இயலாது.
ஏப்ரல் 1 அன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் பிறையை காணலாம்.
ஏப்ரல் 1 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:27 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:57. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 44 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 90 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் எளிதாக பிறையை
வெறுங்கண்ணால் காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு - மார்ச் 31 - ஜமாஅத்துல் ஆஹிர் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு மார்ச் 30 (அமாவாசை) அன்று ஜமாஅத்துல்
அவ்வல் 29 பூர்த்தி ஆகிறது. அன்று - உலகில் எங்கும் பிறையை காண இயலாது. எனவே மார்ச் 31 அன்று ஜமாஅத்துல் அவ்வல் 30 பூர்த்தி செய்து, ஏப்ரல் 1 அன்று ஜமாஅத்துல் ஆஹிர் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு மார்ச் 30 (அமாவாசை) அன்று ஜமாஅத்துல் அவ்வல் 28 பூர்த்தி ஆகிறது. எனவே அவர்கள் மார்ச் 31 அன்று ஜமாஅத்துல் அவ்வல் 29 பூர்த்தி செய்வர். மார்ச் 31 அன்று காயல்பட்டினத்தில் பிறையை
வெறுங்கண்ணால் - வானிலை சூழல் தெளிவாக இருந்தால் - காணலாம். அவ்வாறு கண்டால், அவர்கள் - மார்ச் 31 அன்று ஜமாஅத்துல் அவ்வல் 29 பூர்த்தி செய்து, ஏப்ரல் 1 அன்று ஜமாஅத்துல் ஆஹிர் மாதம் துவக்குவர்.
மார்ச் 31 அன்று வானிலை சூழல் காரணமாக பிறை தென்படவில்லையென்றால், அவர்கள் ஏப்ரல் 1 அன்று ஜமாஅத்துல் அவ்வல் 30 பூர்த்தி செய்து, ஏப்ரல் 2 அன்று ஜமாஅத்துல் ஆஹிர் மாதம் துவக்குவர்.
ஜமாஅத்துல் அவ்வல் 1435 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும்
|